Tuesday, June 22, 2010

"புனிதமான காதல்"

உன் கூந்தல்பூவாக இருக்க ஆசைப்பட்டேன்.,

உன் கூந்தல் மணத்தை நுகர்ந்து கொண்டே இருப்பதற்காக!

உன் காதோரம் கம்மலாய் இருக்க ஆசைப்பட்டேன்.,

உன் காதோரம் இரகசியங்கள் பேசுவதற்காக!

உன் மூக்குத்தியாக இருக்க ஆசைப்பட்டேன்,

உன் மூச்சுகாற்றாவது என்மேல் படவேண்டும் என்பதற்காக!

உன் உடலில் ஆடையாக மட்டும்

இருக்க வேண்டாம் என ஆசைப்பட்டேன்.,

என் புனிதமான காதல் காமமாகிவிடக்கூடாது என்பதற்காக!





- படித்ததில் பிடித்தது -

No comments:

Post a Comment