Sunday, July 25, 2010

கொல்கிறாய்

எம்மை சுமந்த உன் இதயம்
இன்று எம்மை தொலைத்து விட்டது
உன் உதடுகள் மட்டும்
சொல்கின்ற வார்தைகள் அவை
உன் கண்கள் மட்டும் நீ இன்னும் உம்மை
சுமப்பதை காட்டிக் கொடுக்கின்றனவே
பொய் சொல்லி
உன்னை நீயே கொல்வது மட்டுமல்லாமல்
நாடகமாடி எம்மையுமல்லவா கொல்கிறாய்!

நேசித்த இதயம்

சுற்றமும் சூழலும்

படைத்துவிட்ட

உறவைக் காட்டிலும்

உள்ளமும் உணர்வும்

புரிந்த உணர்வே

மேலாது

நீ நேசித்த இதயத்தை

என்றும் உன்னால்

அழ வைக்க முடியாது

நம்மை நேசித்த இதயமும்

அப்படியே!





- படித்ததில் பிடித்தது -



முயற்சி செய்

தோல்விகளே கிடைத்தாலும்

தோல்விகளே கிடைக்கும்

என்றாலும்

அலையை போல

திரும்ப திரும்ப

முயற்சி செய்

வாழ்க்கை ஜெயிக்கும்





- படித்ததில் பிடித்தது -

Friday, July 23, 2010

இணைய நட்பு நீ

இணையத்தில் வந்த
இனிய நட்பு நீ
இணையம் மட்டும்
நம்மை இணைக்கவில்லை - நமது
இதயதையமும் இணைத்து வைத்தது
நம் நட்பு
காலம் இருக்கும் வரை
காட்சி மறையும் வரை
காற்று எனை கைவிடும் வரை
உன்மேல் இருக்கும்
என் நட்பு குறையாது





- படித்ததில் பிடித்தது -

தொலைந்த இதயம்

மனதினுள் உன் பாசத்தை வைத்தால் !
தொலைந்து விசும் என்று !!
உன் இதயத்தை
என் இதயத்தினுள் வைத்தேன் !!
நீயோ என் இதயத்தையே !!
அறுத்து !!
உன் இதயத்தை எடுத்து செல்கிறாய் !

Sunday, July 4, 2010

உன் நினைவு

உன் நினைவுகள்
என்னை தொடர்வதால்....
என் கண்கள்
உன்னை தேடுவதால்....

என் உள்ளம்

உன்னையே நினைப்பதால்....

உன் மௌனம்

என்னை கொல்வதால்....

நீயே சொல்லிவிடு

எதுவரை

வரப்போகின்றன உன் நினைவுகள்

அது வரை காத்திருக்கும்

என் மரணம்.....!





- படித்ததில் பிடித்தது -