அன்பே!- Homemain page
- Aboutthe author
- Contact ussay hello
- Free Blogger Templates
- Subscribe to RSSkeep updated!
Friday, December 31, 2010
அன்பே சென்று வா
அன்பே!Thursday, December 30, 2010
நண்பர்களுடன் வாழ்வோம்

Tuesday, December 28, 2010
முகாரி ராகமாய்.......!
சரணம் பாடி
இனிய நட்பா?
உன் நட்பைகாதல் செய்தேன்
கவிதை வரவில்லை
கை கோர்த்து திரிந்தேன்
சஞ்சலம் வரவில்லை
தோளிலே சாய்ந்தேன்
தோழமை துளிர்த்தது
மனம் விட்டு பேசினேன்
சோகமெல்லாம் மறைந்தது
எனைவிட்டு பிரிந்தாய்
இதயமே நொறுங்கியது
குதூகலம் தொலைந்தது
வாழ்க்கையே புரியாமல்
கண்கள் பனித்தது
இதை எப்படி சொல்வது
இனி உனக்கு அன்பே
இதற்கு பெயர் தான்
இனிய நட்பா?
Monday, December 27, 2010
நித்தமும் நீ வேண்டும்
அன்று நம் வானம்ஆயிரம் விண்மீன்கள்
பூத்துக் குலுங்கிய
அழகிய நந்தவனம்
ஆசை உள்ளங்களான
அன்றில் பறவைகளின்
அன்புக் கூடு அது
அலையடிக்கும்
புயல் வீசும் - ஆனால்
நாணற் புட்களாய்
வளைந்து கொடுக்கும்
அன்பு உள்ளங்கள்
கைகோர்த்து கதை பேசி
சிறு சண்டை புரிந்து
சின்னதாய் சீண்டி
சிறு ஊடல் கொண்ட
சினேகமான நினைவுகள்
நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சமெல்லாம் ஆனந்தம்
நினைவுகளை நிரந்தரமாய்
தந்துவிட்டு செல்லாதே!
நித்தமும் நீ வேண்டும்
சிறு சண்டை நான் போட!
நட்பு நிசப்தமான உறவா?
நட்புக்காகநட்பை விலத்தும்
நட்பே
நட்பு என்ன
நினைவுகள் அற்ற
நிசப்தமான உறவா
கண்ணியம் நிறைந்த
கற்பு கூடிய விடயம்
நட்புக்காக
காதலை துறந்தவர் உண்டு
நீயோ
புரிந்துணர்வற்ற நட்புற்காய்
உண்மை நட்பை
விலக்குகிறாய்
நாளிகை கூட
வாழ முடியாத நீ
இதயத்தை கல்லாக்கி
எப்படி வாழ்கிறாய்
உன் நாடித்துடிப்பே
அடங்கிவிடும்
இப்படியே நீ
இருப்பாய் என்றால்
இதை கூட புரியாமலா நீ
Sunday, December 26, 2010
சிறிதாய் ஓர் சந்தேகம்
சின்னஞ்சிறு வயது முதல்சினேகமாய் கைகோர்த்து
சிறுகதைகள் பேசி
செல்லமாக சீண்டிய
என் இனிய நட்புறவே
இன்று எங்கு சென்றது
உன் சினேகமும்
இத்தனை நாள் புரிந்துணர்வும்?
நண்பனில் தவறு கண்டால்
நல்லுரை கூறித் தீர்க்கலாம்
ஆனால்
நட்பிலே தவறு கண்டால்
எவ்வுரை கூறித் தீர்ப்பது?
இன்பமோ துன்பமோ
அருகிருந்து அரவணைத்து
ஆறுதல் சொல்பவனே
உண்மை நட்பென்று
இத்தனை நாள்
அர்த்தம் கொண்டேன்
இன்று தான் புரிந்தது
நட்பாலும் பல
காயங்கள் கொடுத்து
ரணமாக்க முடியும் என்று
கூட பழகியவளையே
புரிந்து கொள்ளாத
நீயும் என் நட்பா?
சிறிதாய் ஓர் சந்தேகம்
முளைவிட்டது என் மனதில்!
Saturday, December 25, 2010
உறவுகளை தொலைத்த உள்ளங்கள் சார்பாக.........!
மண்ணை வந்துமுத்தமிட முன்னர்
கருவிலயே
காலனிடம் சென்ற
பிஞ்சு நெஞ்சங்கள்
தம் பாலகர்களின்
இனிய கனவுகளை
நெஞ்சிலே சுமந்து
மார்போடு அணைத்த
பெற்ற உள்ளங்கள்
வாழ்க்கைப் பாதையில்
வாழ்வதற்கு இணைந்து
துணைகளை தொலைத்து
வாழ்க்கையை இழந்த
இளம் ஜோடிகள்
இதயங்களை பரிமாறி
இனிமையான கதைகள் பேசி
இனிய ஆசைளை
இதயத்தில் சுமந்த
காதல் ஜோடிகள்
உணர்வுகளை புரிந்து
உரிமையோடு பழகி
ஒன்றாக உணவருந்தி
கை கோர்த்து திரிந்த
நட்பு உள்ளங்கள்
தள்ளாத வயதினில்
தன் உற்ற துணையை
தயவென எண்ணி
தன்னம்பிக்கையுடன் இருந்த
நம் முதியோர்கள்
இத்தனை பேர்களின்
கனவுகளை காவு கொண்ட
இயற்கை அன்னையே
உனக்குப் பேர் தான்
சுனாமியாம்.........!
இன்றைய நாளிலே
உன் தாகத்திற்கு பலியான
அன்பு உள்ளங்களிற்கு
அஞ்சலி கூறுகிறோம்
உறவுகளை தொலைத்த
உள்ளங்கள் சார்பாக.........!
Friday, December 24, 2010
Thursday, December 23, 2010
நட்பிற்கு பிறந்த நாள்
உணர்வோடு கலந்து
உயிரோடு உறவாடும்
உண்மையான நம் நட்பிற்கு
இன்று பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூற என்னிடம்
வார்த்தைகள் கிடைக்கவில்லை
நம் நட்பின் பரிசாக
நமக்குக் கிடைத்த
நம் நட்புக் குழந்தை
இன்று நம்முடன் இல்லை
இருந்தும் நம் நட்பு
நன்றாகவே தொடர்கிறது
நம் உதிரத்தில்
நாடித்துடிப்பு வரை
நாம் வாழ்வோம்
நம் உண்மை நட்பிற்காய்
நமது நட்பிற்கு
நூற்றாண்டு வயது கண்டு
நாம் வாழ்வோம்
இவ் வையகத்திலே...
இனிய நண்பர்களாக
கைகோர்த்து...............!
Monday, December 20, 2010
தோழியே மன்னித்து விடு!
எழுதியவர் - மிருணன்
Friday, December 17, 2010
நான் மட்டும் விதிவிலக்கா?
எழுதியவர் - மிருணன்
Categories
- காதல் கவிதைகள் (20)
Blog Archive
-
▼
2010
(143)
-
▼
December
(23)
- அன்பே சென்று வா
- நண்பர்களுடன் வாழ்வோம்
- முகாரி ராகமாய்.......!
- இனிய நட்பா?
- நித்தமும் நீ வேண்டும்
- நட்பு நிசப்தமான உறவா?
- சிறிதாய் ஓர் சந்தேகம்
- உறவுகளை தொலைத்த உள்ளங்கள் சார்பாக.........!
- பொக்கிஷம் நீ
- இனிய நத்தார் வாழ்த்து
- நட்பிற்கு பிறந்த நாள்
- ஓமத்து நெருப்பைப்போல........
- உன் புரிந்துணர்வு எங்கே?
- தோழியே மன்னித்து விடு!
- நண்பர்களே போதும்....!
- நான் மட்டும் விதிவிலக்கா?
- என் வருத்தமெல்லாம்...........!
- புரிந்து கொள் என் அன்பே!
- எப்படி முடிந்தது உன்னால்
- ஒர் பெண்ணின் ஏக்கம்
- அந்த ஒரு கணப்பொழுது........
- என்னுடைய தெரிவு
- முதல் சந்திப்பின் நினைவாக
-
▼
December
(23)






