Thursday, December 2, 2010

அந்த ஒரு கணப்பொழுது........

என்னை
உன்னிடம்
வசீகரித்துச் சென்ற
அந்த ஒரு கணப்பொழுது
காத்திருப்பை
கைவிட்டு விட்டு
நிசப்தத்தில் இருந்து விலகி
நெஞ்சை விட்டகலாத
பசுமையின் எதிரொலிகள்
நட்சத்திரங்கள்
கண் சிமிட்டுகின்ற
இருண்ட வானத்தில்
அவற்றின்
வசீனரமும்
ஆளுமையும்....
மெல்ல மெல்ல
நான்
வல்லமையிழந்து
வலுவிழந்து செல்லுகையில்..
உண்மையின் பரிணாமம்
உயிர்ப்பதையும்
காலத்தின்
புதிய ஏடுகள்
பக்கம் புரட்டப்படுவதையும்
உன்னால்
உருவாக்கப்பட்ட
அந்த
ஒரு கணப்பொழுதின்
விடியலினூடாக
என்னால்
உணர முடிந்தது.



எழுதியவர் - குகநிதி

No comments:

Post a Comment