உன்னை நேசிப்பதை விட
உன்னால் நான் நேசிக்கப்படும் போது தான்
நேசத்தின் தார்ப்பரியம் புரியப்படுகிறது
நேசிப்பின் ஆழம் உணரப்படுகின்றது
கர்வம் மேலோங்குகிறது
பணத்தாலோ
உன் பதவியாலோ
நீ
என்னை கவர்நது விடவில்லை
உனது பண்பால்
என்னுள் உயர்ந்து நிக்கின்றாய்
மதம் வேறு
செய்கை வேறு
ஆனால்
என்னுள்
உணர்வொன்றிப் போய் விட்ட
சாதாரணமானவன் நீ
காதலுக்கு அடித்தளம்
அழகோ
இளமையோ இல்லை
புரிந்துணர்வு,
விட்டுக் கொடுப்பு
மனித நேயம்
இவை
இவை
உன்னிடத்தில்
இருப்பதால் தான்
இருப்பதால் தான்
நண்பனே!
இந்த கணப்பொழுது வரை
உன்னை நான் காதலிக்கிறேன்
எழுதியவர் - குகநிதி
எழுதியவர் - குகநிதி

No comments:
Post a Comment