Saturday, February 26, 2011

விழிகளின் பார்வை

அன்பே!

உன்னோடு பேச

உதடுகள் துடித்தாலும்

உன்னைப் பார்த்த நொடி

அத்தனையும் அடங்கியது


நம் ஸ்பரிச தீண்டலில்

உண்டான உணர்வுகள்

ஓராயிரம் கதைகளை

ஒப்புவித்து சென்றது


விழியோடு விழி பேசி

விடை தேட நினைக்கையில்

விடை காணா வினாவாக

விழிகள் நிறைகின்றது


உன்னை விட்டு பிரியும்

ஒவ்வொரு கணப்பொழுதில்

உண்டான ஏக்கங்கள்

இன்னும் என் கண்முன்னே....!

ஊமையாய் கதைகள் பேசி

உள்ளுக்குள்ளே அழுகின்றன.


நட்பின் புன்னகைக்கு

உதடுகள் தேவையில்லை

இதயமே போதுமென

உன்னாலே அறிந்தேன்

உயிருள்ள தோழியே!

Friday, February 18, 2011

காதல்

கண்கள் சந்தித்தவேளை
காதல் மலர்ந்தது நெஞ்சி்ல
கிளிகளை போல வானில்
கீச்சிட்டுப் பறந்தது உள்ளம்
குடும்பத்தில் இணைய எண்ணி
கூப்பின கடவுளை நம்பி
கைதிகளாகின நெஞ்சம்
கெட்டவர் கண் பட்டதால்
கேள்விகள் பல கேட்டனர்
கொடுமைகள் பல செய்து
கோபத்தை கொட்டினர் நெஞ்சில்
கௌரவம் பார்த்து இங்கு
காதலரை பிரித்தனர்
காதலின் முடிவு இங்கு
க முதல் கௌ வரை தான்

Thursday, February 17, 2011

உயிரெழுத்தான தியாகம்

அன்புக்குரியவரிற்கு
ஆசை வைத்த உள்ளத்தின்
இதய பூர்வ மடல்
ஈரைந்து மாதங்கள்
உயிரோடு எனை சுமந்து
ஊருக்கு காட்டிய
என் இனிய பெற்றவளுக்காய்,
ஏர் சுமந்து எமை காக்கும்
ஒழுக்கமான தந்தைகாய்,
ஓர் மனப்பட்ட எம் காதலை
ஔஷதமாய் நினைத்து
இஃது தியாகம் செய்கிறேன்
கண்ணாளனே!
காரிகை இவள்
கை கூப்பிக் கேக்கிறேன்
கன்னியிவளை மன்னித்துவிடு

Monday, February 14, 2011

வலன்ரைன் தின வாழ்த்து

பத்து மாதம் கருவிலே

பக்குவமாய் சுமந்து

பெற்றெடுத்த அன்னையை

பாசமாய் அன்பு செய்வதும்

காதலே!

அன்பாக அரவணைத்து

அறிவுரை கூறிடும்

அன்புத் தந்தையை

ஆசையாய் அன்பு செய்வதும்

காதலே!

உதிரத்தை பங்கு போட்டு

ஓர் தாயின் வயிற்றில்

ஒன்றாக பிறந்த

உடன் பிறப்புகளை

பாசமாய் அன்பு செய்வதும்

காதலே!

ஒன்றாக கதை பேசி

சோகங்களை பகிர்ந்து

இன்புற்றிருக்கும் நண்பர்களை

ஒருமனமாக அன்பு செய்வதும்

காதலே!

பால் வடியும் முகத்தால்

ஆயிரம் கதை பேசும்

பச்சிளம் பாலகரை

பரிவாக அன்பு செய்வதும்

காதலே!

பல கனவுகளோடு

பாரினிலே குழந்தைகளை

பெற்றெடுத்து வளர்த்து

தளர்ந்து போய் இருக்கும்

முதியவர்களை

கௌரவமாய் அன்பு செய்வதும்

காதலே!

உயிருக்கு உயிராக

உணர்வுகள் சங்கமிக்க

ஒரு மனப்பட்டு

புரிந்துணர்வாய் வாழும்

வாழ்க்கைத் துணையை

மனதார அன்பு செய்வதும்

காதலே!

பருவ வயதினரிடம்

கட்டிளம் பருவத்தினரிடம்

இதயத்தில் பற்றிக்கொள்ளும்

பாசமான உணர்வு பரிமாற்றத்தை

புனிதமாக அன்பு செய்வதும்

காதலே!

காதலுக்கு உண்மையான

அர்த்தமே அன்பு செய்தல்

அன்புக்கு வடிவங்கள்

ஆயிரம் இருந்தாலும்

அன்பு செய்யும் உள்ளங்களுக்கு

வடிவம் ஒன்றே

அனைவரும் காதல் செய்யுங்கள்

அன்பு உள்ளங்களை!

Thursday, February 10, 2011

காதல் பரிசு

அன்று
இன்றைய நாளில்
நீ தந்த காதல் பரிசு
இன்னும் என் நெஞ்சோடு
உறவாடிக் கொண்டு.....!
சில வருட காலத்தில்
அதே நாளில்
விதி உன் வாழ்வை
எட்டி பார்க்க
நீயே பரிசானாய்
வேறொருத்திக்கு!
நம் உறவு தான்
வழி மாறி போனது
ஆனால்
நம் காதல்
இன்னும் வாழ்கிறது
நம் மனங்களில் புனிதமாக!
அதனால் தான் நம் பாசம்
இன்னும் தொடர்கிறது
புனிதமான நட்பாக!

Sunday, February 6, 2011

இது கவிதையல்ல நினைவு

இசை இனிமை கூடியவள் என்பதால்
நான் அவளை மென்மையான பல
உணர்வுகளாலான இதயமொன்றில்
அமர்த்தி வைத்திருக்கிறேன்.
அதனுள் அமைய
அவள் சம்பந்தமில்லாதவள்.....!
புதிதாய் தோன்றிய
ஸ்வரக்கோவையொன்று
72 மேள இராகத்தினுள்
தாய் ராகம் ஒன்றாக
பிரகாசிக்க முடியுமா....?
ஆம் ஆம்
அந்த 72 மேள இராகத்தினுள் தான்
அவளையும் அமர்த்தியிருக்கிறேன்.
ஏனெனில்
அவளை அமர்த்தும் போது
அப்பொழுது தாய் இராகங்களுக்கு
விசேஷ வாசனை
வரும் என்பதால் தான்....!
அவள் வேறு யாருமல்ல
நீதானடி....!
தாய் இராகங்களை விட
சேய் இராகங்கள்
இனிமை கூடியவை என்ற கருத்து
இனியாவது மறையட்டும்.....!

Friday, February 4, 2011

மனம் வருந்தாதே!

மனசே!

மனசை தொட்டு

மனதார சொல்கிறேன்

மனம் வருந்தாதே!

உனக்கு அழைப்பு எடுக்கும்

ஒவ்வொரு கணங்களும்

என் மனதில் ஏதோ

சிறிதாக நெருடல்!


உனக்கு அது தொலைபேசி

எனக்கு அது தொல்லைபேசி

உன்னோடு பேசும்

ஒவ்வொரு நிமிடமும்

அலைவரிசை குழப்பத்தால்

உண்டாகும் கோவத்தில்

உன்னை நான்

காயப்படுத்திடுவேனா என்று!


கவலை கொள்ளாதே!

தடங்கலின் போது

நான் கோவிப்பது

உன்னை அல்ல

உன் தொலைபேசியை மட்டும் தான்

அன்பாக பேச எடுத்தால்

அதற்கும் ஒரு விக்கல்

அவசரமாய் பேச எடுத்தால்

அடிக்கடி கட்


பொறுமைக்கும் எல்லை உண்டு

போதும் இந்த நச்சரிப்பு

சீக்கிரமாய் செயல்படு

மாற்றி விடு உன் சிம் காட்டை.

Tuesday, February 1, 2011

வாழ்க்கைப் புத்தகம்

வாழ்க்கைப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கையில்
வாழ்ந்த பக்கங்கள்
வாசம் மிகுந்தவை
வலிகளும் நிறைந்தவை!

பாசமுள்ள உறவுகள்
வேசமுள்ள நெஞ்சங்கள்
தோள் கொடுக்கும் உறவுகள்
காலை வாரும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

கண்ட இடத்திலே கைகுலுக்கும்
போலி உறவுகள்
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.....!

வாழ்க்கை அா்த்தத்தோடு
வாழும் உறவுகள்
எப்படியும் வாழலாம்
என்றெண்ணும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

பாசத்தை விலை பேசி
பங்கு போடும் உறவுகள்
வறுமையிலும் வாழ்ந்து காட்ட
போராடும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்!

துவழ்ந்து போனால்
தூக்கி வீசும் உறவுகள்
நிமிர்ந்து நிற்கையில்
மார்தட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் உறவுகள்
தன்னை விட உயர்ந்திட்டால்
பழமை குத்திக்காட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.......!

வாழ்க்கைப் புத்தகத்திற்கு
பக்கங்கள் இரண்டு
நல்லதும் கெட்டதும்
நானிலத்தில் உண்டு
புரிந்து கொண்டால்
சொர்க்கமே நமக்கு....!

பாசத்தின் வலிமை

அன்று
என் அறியாத வயதில்
பல நாட்கள்
புரியாமல் பழகிய போது
தெரியாத உன் பாசம்
இன்று
சில நாட்கள் உன்னோடு
பழகியதில் தெரிகிறது
உன் பாசத்தின் வலிமையும்
பிரிவின் கொடுமையும்