காதல் மலர்ந்தது நெஞ்சி்ல
கிளிகளை போல வானில்
கீச்சிட்டுப் பறந்தது உள்ளம்
குடும்பத்தில் இணைய எண்ணி
கூப்பின கடவுளை நம்பி
கைதிகளாகின நெஞ்சம்
கெட்டவர் கண் பட்டதால்
கேள்விகள் பல கேட்டனர்
கொடுமைகள் பல செய்து
கோபத்தை கொட்டினர் நெஞ்சில்
கௌரவம் பார்த்து இங்கு
காதலரை பிரித்தனர்
காதலின் முடிவு இங்கு
க முதல் கௌ வரை தான்

காதலின் முடிவு இங்கு
ReplyDeleteக முதல் கௌ வரை தான்
.... Good one!
கெளரவம் பார்த்து காதலரை பிரித்தனர்....எத்தனை காதலர் பிரித்தனர்.இப்பொது சற்று விழித்துக் கொண்டன்ர் . அவர்களது எதிர் காலம் என் புரிந்துணர்வு தென்படுகிறது. எதிர் நீச்சல் போட்டு வெல்வது தான் உண்மைக் காதல்.
ReplyDelete//க முதல் கௌ வரை தான்//
ReplyDeleteஇதை வாசித்தது தான் புரிந்தது ..அருமை ..வாழ்த்துக்கள் :)
அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்
நன்றி நண்பர் கவிதை காதலன்
ReplyDeleteநல்லதொரு வரிக் கோர்ப்பு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்
சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்