Sunday, February 6, 2011

இது கவிதையல்ல நினைவு

இசை இனிமை கூடியவள் என்பதால்
நான் அவளை மென்மையான பல
உணர்வுகளாலான இதயமொன்றில்
அமர்த்தி வைத்திருக்கிறேன்.
அதனுள் அமைய
அவள் சம்பந்தமில்லாதவள்.....!
புதிதாய் தோன்றிய
ஸ்வரக்கோவையொன்று
72 மேள இராகத்தினுள்
தாய் ராகம் ஒன்றாக
பிரகாசிக்க முடியுமா....?
ஆம் ஆம்
அந்த 72 மேள இராகத்தினுள் தான்
அவளையும் அமர்த்தியிருக்கிறேன்.
ஏனெனில்
அவளை அமர்த்தும் போது
அப்பொழுது தாய் இராகங்களுக்கு
விசேஷ வாசனை
வரும் என்பதால் தான்....!
அவள் வேறு யாருமல்ல
நீதானடி....!
தாய் இராகங்களை விட
சேய் இராகங்கள்
இனிமை கூடியவை என்ற கருத்து
இனியாவது மறையட்டும்.....!

2 comments:

  1. இசையே ஒரு கவிதை, அந்த கவிதைக்கே நீங்கள் இசை பாடி விட்டீர்கள்....

    ReplyDelete
  2. நன்றி நண்பர் நாஞ்சில் மனோ
    நன்றி நண்பர் ரமணி

    ReplyDelete