அன்று இன்றைய நாளில்
நீ தந்த காதல் பரிசு
இன்னும் என் நெஞ்சோடு
உறவாடிக் கொண்டு.....!
சில வருட காலத்தில்
அதே நாளில்
விதி உன் வாழ்வை
எட்டி பார்க்க
நீயே பரிசானாய்
வேறொருத்திக்கு!
நம் உறவு தான்
வழி மாறி போனது
ஆனால்
நம் காதல்
இன்னும் வாழ்கிறது
நம் மனங்களில் புனிதமாக!
அதனால் தான் நம் பாசம்
இன்னும் தொடர்கிறது
புனிதமான நட்பாக!
yaar athu sollave illa ?
ReplyDeleteநட்புக்கு காதலர் தின வாழ்த்துக்கள்......
ReplyDeleteநன்றி நண்பர் நாஞ்சில் மனோ
ReplyDeleteஹாய் மதி!
ReplyDeleteகவிதைக்கு எல்லாம் காரணம் இருந்தால் இங்கு யாருமே கவிதை எழுத முடியாது. காரணம் இருந்தால் மட்டும் தான் கவிதை எழுத முடியும் என்றால் இங்கு காதல் வயப்பட்டவர்களும், சோகமானவர்களும், தத்துவ மேதைகளும் மட்டும் தான் கவிதை எழுத முடியும்