Tuesday, May 31, 2011

சிந்தனை செய் மனமே!

சிக்கலுக்குள் சிக்கி
சின்னா பின்னமாகும்
சிறு இதயமே!

சிக்கலை கூட
சிக்கில்லாமல் எடுத்திடும் உன்
சிந்தனை மனமெங்கே?

சிந்தனை கூட
சில சமயங்களில்
சிதறடிக்கப்பட்டு விடும்

சிந்திக்க சிந்திக்க
சிறப்பான கருத்துகள்
சிந்தையில் தோன்றிடும்!

சில நொடி நீ
சிந்தாமல் சிதறாமல் - உன்
சிந்தையை நிறுத்து!

சீண்டியுனை பார்த்திடும்
சீரற்ற எண்ணங்களை
சிறு நிரற்படுத்து!

சிந்தித்து பார் - நீ
சிதறவிட்ட தருணங்களை
சீரான பதில் கிடைக்கும்!

சிதைந்து போன கனவுகளும்
சிரம் தாழ்த்தி உன்னிடம்
சிரிப்போடு வந்துவிடும்!

சில நொடி சிந்தனை கூட
சீரான உன் வெற்றிக்கு
சிறந்த ஓர் திறவு கோல்

Sunday, May 29, 2011

எண்ணிப் பார்க்கிறேன்

நான் நானாகவும்
நீ நீயாகவும்
இருந்த அந்த நாட்களை
எண்ணிப் பார்க்கிறேன்
நினைவில் இல்லை

இன்று
நான் நீயாகவும்
நீ நானாகவும்
முழுமையாக
மாறிவிட்டோம்

உன் பிரிவு என்னையும்
என் பிரிவு உன்னையும்
சில நாட்கள் என்றாலும்
யுகங்களாக்கி பார்க்கிறது
காரணம் மட்டும் புரியவில்லை

நினைத்துப் பார்க்கவே
நிச்சயமாய் முடியவில்லை
நமக்குள் எப்போதாவது
நிரந்தரமான பிரிவினை........!

Saturday, May 28, 2011

நட்புக்காக..........!

எதிர்பாராமல் கிடைத்த
இனிய நட்பு நீ
பல காலம் பழகாமல்
பலவிடயம் பகிர்கிறாய்

இருந்தும் மறைக்கிறாய்
இனிய ஓர் காரணத்தை
இனிமையாய் கேட்டாலும்
இலாவாக நழுவுகிறாய்

நம் நட்பிற்கான காரணத்தை
நானும் கேட்டு விட்டேன்
நயமாக உன்னிடம்
பல தடவைக்கு மேலாக

இருந்தும் நீ இங்கு
விலாங்கு மீனை போல
நழுவியே செல்கிறாய்
நாசூக்காய் என்னிடம்

காரணம் கேட்டு நான்
களைத்தே போய் விட்டேன்
கவலையில்லை இனி எனக்கு
காரணமும் தேவையில்லை

புரிந்து கொண்டேன்
இன்று நான்
காரணம் கொண்டு இங்கு
வருவது நட்பல்ல என!

Tuesday, May 24, 2011

புரியவில்லை

அன்பே!
இத்தனை நாட்கள்
எம்மிடம் இருந்தது
என்ன உறவு?

இப்போ சில காலம்
எம்முள் வந்தது
என்ன உறவு?

நம் உறவின் நெருக்கம்
நாளுக்கு நாள்
நெருங்கியே செல்கிறது

மானசீக நம் உறவின்
மனங்களிடையே சிறு
மகிழ்ச்சிகள் பொங்குது

நினைக்காத மாற்றங்கள்
நிஜமாக நடக்கையில்
நெஞ்செல்லாம் ஆனந்தம்

சிறு சிறு சீண்டலில்
சிலிர்த்திடும் ஆனந்தம்
சிந்திக்கவே முடியவில்லை

நட்புக்குள் கூட மனங்கள்
நம்மை போல் இப்படியா?
நம்பமுடியவில்லை

ஆயிரம் இருக்கட்டும்
ஆயுளுக்கும் நாம் இருப்போம்
அன்பு உள்ளங்களாய்!

Friday, May 13, 2011

சங்கடபடக் கூடாது என்பதற்காய்!

அன்பே!
சில வருடத்தின் முன்
வழியனுப்பும் வலியை
ஒரு தடவை பார்த்துவிட்டேன்
இன்று
கண்கள் சந்திக்காமலே
விடைபெற்று செல்கிறேன்
காரணம்
கை அசைத்து
விடை கொடுக்கும் நீ
கண்ணீர் துளிகளை மறைக்க
சங்கடபடக் கூடாது என்பதற்காய்!

Thursday, May 12, 2011

நட்பென்ற வடிவினிலே!

அன்புக்கு அன்னையாய்
அறிவுரைக்கு தந்தையாய்
பாசத்திற்கு அக்காவாய்
கண்டிப்புக்கு அண்ணனாய்
சீண்டலுக்கு தங்கையாய்
சிணுங்கலுக்கு தம்பியாய்

தட்டிக் கொடுத்திட ஆசானாய்
தலை கோதிட தோழியாய்
சேர்ந்து மகிழ்ந்திட நட்பாய்
தோள் சாய்ந்திட தோழனாய்
மழலை பேசிட குழந்தையாய்
மன்னித்திட மனசுள்ளவளாய்

பற்பல வடிவெடுக்கும்
பாசமான நட்பே
பாரினிலே உன் போன்ற
பக்குவமான பாச உறவு
ஆயுளுக்கும் எனக்காக
ஆண்டவன் தந்நுவிட்டான்
அன்பே உந்தன்
நட்பென்ற வடிவினிலே!

Tuesday, May 10, 2011

புனிதமான நட்பு

அன்பே!
உன் குழந்தைதனத்திற்குள்
குடிகொண்டவளுக்குள்
நானும் ஒருத்தி தான்!

இருந்தும் அக் குழந்தை
சமூகத்தின் பார்வைக்குள்
அமிழ்ந்து விட கூடாதென
ஆயிரம் முறை
எண்ணுபவளும் நான் தான்

நான் பொறுப்பற்று நடந்தால்
பொறுப்பானவள் என்று
பாராட்டு உனக்கு
நான் வாழ்வில் வசதியாக வாழ்ந்தால்
அதிஷ்டமில்லாதவள் என
உனக்கு திட்டு!
இது தான் சமூகம்

உன் பிழைகள் என்னையோ
என் பிழைகள் உன்னையோ
காயப்படுத்தியதுமில்லை
கோவப்படுத்தியதில்லை

இத்தனை உண்மையான
இனிய எம் உறவுதான்
புனிதமான நட்பா?
சொல்லிவிடு அன்பே!

Saturday, May 7, 2011

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.


பத்து மாதங்கள் என்னை
பக்குவமாய் சுமந்து
பல துன்பங்கள் தாண்டி
பாசமாய் பெற்றெடுத்து
பாரினிலே என்னை
பலர் முன் அறிமுகம் செய்த - என்
பாசமான அன்னையே!

இன்று உனக்கென
அன்னையர் தினமாம்!
அகிலத்தில் எம்மை
ஆளாக்கி காட்டிய உனக்கு
இன்று மட்டும் தான்
அன்னையர் தினமா?
ஆயுள் முழுவதும்
தினமும் வாழ்த்தினாலும்
ஈடாகுமா இங்கு
உனக்கு பட்ட கடன்?

பசியோடு நீ அங்கு
பட்டினியாய் இருந்தாலும்
பாசத்தோடு உதிரத்தை
பாலாக்கி ஊட்டுவாய்
பசி தீர்ந்து உனை பார்க்கும்
பாலகனை அணைத்திடுவாய்

பள்ளிக்கு எமை எல்லாம்
பாசமாய் வழி அனுப்பி
பக்குவமாய் வரும் வரை
பரிதவிப்பாய் காத்திருப்பாய் - உன்
பார்வையிலே எம் பிம்பம்
பட்டதுவும் ஓடி வந்து
பாசமாய் கட்டியணைத்து
பல முத்தங்கள் நீ சொரிந்திடுவாய்

இத்தனைக்கும் பாசமான
என் இனிய அன்னையே
உனக்கான நாளினிலே
உரிமையோடு வாழ்துகிறேன்
உரித்தாகுக வாழ்த்துகள்

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

Wednesday, May 4, 2011

நியாயமா?

உன் தொலைந்து போன
சந்தோசங்களை
தேடித் தந்தவளும்
நான் தான்
இன்று
முடிவில்லாத துயரத்தை
தொடக்கி வைத்தவளும்
நான் தான்
அதற்காக
என்அடிமனதில் வளர்த்த
சந்தோசங்களை எல்லாம்
தப்பானவள் எனக் கூறி
பறிமுதல் செய்தால்
நியாயமா?