தீண்டிப் பார்க்கும் உன்
தீராத சில்மிசங்கள்
தித்திப்பாய் இருந்தாலும்
தற்செயலாக நம்
மனங்களையும் ரணப்படுத்தி
காயங்கள் காண்கிறது
ரணங்களை குணமாக்க
மீண்டும் போடும்
கொஞ்சல்களால் கெஞ்சுகிறது
நம் மனது
இது தான் அன்பா?
பாலூட்டி சீராட்ட வேண்டிய
பெண்ணே!என் மனசு என்ற சமுத்திரத்தில்
இதயம் எனும் மீன் பிடிக்க
காதல் என்ற தூண்டிலினை
கருத்தோடு போடுகிறாய்
உன் கையில் கிடைக்கையில்
என் இதயத்திற்கு வரும்
காதல் காயத்திற்கு
கருணையோடு நீ இங்கு
மருந்தாவாய் என்ற துணிவில்
தயக்கமின்றி சிக்குகிறேன்
கண்மணியே உன் தூண்டிலுக்குள்!
இரவை நேசிப்பவர்கள் பலர்இரவின் மடியில்
இறுக்கி அணைக்கும்
தலையணையை நட்பாக்கி
இதயத்தின் சுமைகளை
இறக்கி வைப்பார்கள்!
நானோ
மழைத்துளிகளை
மனதார நேசிக்கிறேன்
என் கண்ணோடு கரையும்
கண்ணீர் துளிகளை
கவலையின்றி தன்னுள்
ஒன்றாக்கி கொள்வதால்!
மழையே
என் மழையின் துளியே
மனதார நான் இங்கு
கலங்கி நிற்கும் போது
நொடிகூட தயங்காமல்
என் ஸ்பரிசங்களை
தொட்டு சென்று விடு!
என்னை ஆறுதல் படுத்தும்
இனிய இயற்கையே
உன்னை நான் இங்கு
செயற்கையாய் தேடுவது
சாத்தியமாய் இல்லை!
உன் துளிகளாய் நினைத்து
என் சோகத்தின் முகவரியை
சொல்ல துடிக்கும் என்
கண்களின் அருவிகளை
கண்ணீராய் கையேந்தும்
என் குழியலறை பூங் குழாய்களுக்கு
தற்காலிகமாய் நன்றி சொல்வேன்
மழைத்துளியே நான் உன்னை
மனமார தரிசிக்கும் வரை
அன்பே
கருவறையை நேசித்தேன்