Friday, July 8, 2011

நேசிப்பு

கருவறையை நேசித்தேன்
பத்து திங்களில் பறிபோனது
பாசத்தை நேசித்தேன்
பணத்தை பார்த்ததும் தடுமாறியது
நிலவை நேசித்தேன்
வெகு தொலைவில் நின்றது
காற்றை நேசித்தேன்
கைக்குள் சிக்க மறுத்தது
மழையை நேசித்தேன்
என்னை தொட்டுவிட்டு சென்றது
இரவை நேசித்தேன்
விடியலை கண்டதும் விடைபெற்றது
கனவை நேசித்தேன்
தூக்கம் கலைந்ததும் கலைந்தது
அன்பே உன்னை நேசித்தேன்
உயிருள்ளவரை இருப்பாய் என்று!

No comments:

Post a Comment