Monday, July 11, 2011

எப்படி முடியும்?

அன்பே
உன்னால் மட்டும் எப்படி
உயிரையே தூக்கி போட
ஒரு நொடியில் முடிந்தது

பழகிய நினைவுகளை
பகல் கனவாய் மறந்து
பாசாங்கு பண்ணும் உன்னை
பரிதவிப்பாய் பார்க்கிறேன்

பாசமாய் பேசிடும் உன்
பக்குவமான வார்த்தைகள்
கண் சிமிட்டும் நொடியிலே
கலைந்து தான் போனதேன்

கலைந்து போன என்
கண்ணீர் கனவுகளுடன்
கண்மணியே உனக்காக
காத்திருக்கிறேன் நான்

தோழமையாய் வந்து
தோழோடு அணைப்பாயா
தொட்டாலே பாவம் என்று
தொலைவிலே செல்வாயா?

No comments:

Post a Comment