பாலூட்டி சீராட்ட வேண்டியபாசமான என் அன்னை
பாதி வழியிலே
பரிதாபமாய் இறந்து விட்டாள்
பண்பை வளர்க்க வேண்டிய
பாசமிகு என் தந்தை
காணாமல் போனோரின்
பட்டியலில் இணைந்து விட்டார்
பள்ளி செல்லும் வயதில்
படிப்பின்றி நான் இங்கு
பாதையோரமாய்!
இத்தனைக்கும் காரணம்
இனிய என் திருநாட்டில்
இடைவிடாது நடந்த யுத்தம்
சொந்தங்களை தொலைத்த
சோகமான எனக்கு
சொந்தம் என்று சொல்வது
அநாதை என்ற பெயர் மட்டும்!
ஈழத்தின் அவலத்தை பாவாக வடித்தவிதம் அருமை ஆனால் அதிலுள்ள சோகம் இதயத்தை அல்லவா நோக செய்கிறது . நல்லவரிகள் இந்த பழய்போன தமிழ் குமுகத்திற்கு என்றுதான் விடிவு கிடைக்குமோ தாய்தமிழகத்தியும் சேர்த்தே சொல்லுகிறேன் .
ReplyDeleteநன்றி நண்பர் போளூர் தயாநிதி
ReplyDelete