வானத்தில்
வானவில்கள் வந்ததில்லை
வந்து போன மேகங்கள்
மழைத்துளிகள் தந்ததில்லை
கடந்த கால கவலைகள்
நெஞ்சை விட்டு நீங்கவில்லை
அதை நினைத்து நினைத்து
மனதும் உறங்கவில்லை
நான் ஓய்ந்து போகும் வரை
ஓயாமல் துயரங்கள்
என்னை விடுவதாயில்லை
எனக்கு மட்டும் ஏன் இப்படி
எதுவுமே தெரியவில்லை
இன்னும் இந்த உலகை
நான் முழுதாய் அறியவில்லை
இத்தனை இருந்தும் நான்
இங்கு அழுவதில்லை
சாதிப்பேன் என்ற நம்பிக்கையில்
இன்னும் நான் சாகவில்லை!
கலக்கல் கவிதை
ReplyDeleteஅருமை பாராட்டுக்கள்
ReplyDeleteசாதிப்பேன் என்ற நம்பிக்கையில்
ReplyDeleteஇன்னும் நான் சாகவில்லை!
அருமையான கவிதை வாழ்ந்து காட்டுங்கள . பாராட்டுக்கள்.