அன்று என் நண்பன்ஆசையாய் பயணித்தான்
முழு சொகுசு பேருந்தில்
அன்றோடு அவன் வாழ்வில்
அது மறக்க முடியா
அனுபவமாயிற்று.
பெரிதாக ஒன்றும்
சொல்வதற்கு இல்லை
காரணம்
பேருந்தின் குளிரூட்டல்
அவனால் தாங்க
முடியாமை தான்!
அவனுக்கு வாழ்க்கையில்
ஆயிரம் லட்சியங்கள்
அத்தனையும் தூக்கிபோட்டான்
அந்த நொடியலேயே!
அவன் கனவே வெளிநாட்டில்
மேன்மையான தொழில் பார்ப்பது
அந்த பேருந்து பயணத்தின் குளிர்
அவன் வாழ்க்கையின்
இலட்சியங்களுக்கு
முற்றுப்புள்ளி ஆகியது.
இந்த குளிரே இப்படி என்றால்
வெளிநாட்டுக் குளிர்....?
ஐயகோ.....!
ஒரு சொகுசு பேருந்துப் பயணம்
என் இனிய நண்பனின் வாழ்வில்
மறக்க முடியா அனுபவம்......!
அவன் இலட்சியங்களுக்கு
முற்றுப்புள்ளி......!
நினைத்துப் பார்க்கவே
கண்கள் பனிக்கிறது!
நட்பே ஒரு குளிர் உன்னை
இப்படி ஆக்கிவிட்டதா.....?





