இன்று நீ
புதிதாய் பிறந்தாயா?
இல்லை நாம்
புதிதாய் பிறந்தோமா?
இல்லை
நம் நட்பு, காதல்
புதிதாய் பிறந்ததா?
எதுவுமே புரியவில்லை
இருந்தும் மனதில்
சிறிதாய் ஒரு வருடல்
உள்ளுக்குள் ஓர் நெருடல்
நினைத்துப் பார்க்க
நிசப்தமான நினைவுகள்
நெஞ்சத்தை பிழிந்தாலும்
அது கூட சுகம் தான்
இன்று நம் வாழ்க்கையை
இஷ்டப்பட்டு மாற்றிய
இறைவனை நொந்து
இனி என்ன ஆவது?
நமக்கென்ற வாழ்க்கையை
வாழ்வது தான்
வாழ்வின் சாதூர்யம்
இன்னும் நமக்கு
ஜென்மங்கள் வேண்டும்
அன்றும் நாம்
அன்பு செய்ய வேண்டும்
தண்டவாளங்களாய்
இருந்தல்ல.....
தலைகோதும் துணைகளாக
வாழ்க்கையில் இணைந்து!

ஃஃஃஃஃஃஃஎதுவுமே புரியவில்லை
ReplyDeleteஇருந்தும் மனதில்
சிறிதாய் ஒரு வருடல்ஃஃஃஃஃ
இருக்கும் இருக்கும்... அது போல் கவியும் மனதில் இருக்கும்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்
நன்றி நண்பர் ம.தி.சுதா
ReplyDeletecute poem... very nice... keep it up.
ReplyDelete