Wednesday, August 31, 2011

காதல் வாழ்க்கை


இதயமென்ற கோவிலிலே
காதல் என்ற விளக்கேற்றி
கனவுகள் எனும் எண்ணை ஊற்றி
கன்னியிவள் காத்திருந்தாள்!

சில்லென்ற காற்றிற்கு
கைகளையே அணையாக்கி
காற்றிற்கு வேலி போட்டு
காத்து வந்தாள் விளக்குதனை!

கைகளையும் மீறி இங்கே
காற்றெல்லாம் புயலாகி
சுடரோடு சேர்த்து இங்கு
விளக்கையும் அழிக்கிறது

விதி விட்ட பாதையிலே
விளக்கோடு சேர்ந்திங்கு
விட்டில் பூச்சியாய் எரிவது
இவள் ஆசைகள் மட்டுமல்ல
காதல் வாழ்க்கையும் தான்

Tuesday, August 30, 2011

நிலவும் நானும்

பரந்து விரிந்த வானில்
அந்த ஒற்றை நிலா
என்னை போன்றே தேய்ந்தபடி
இடையிடையே கண் சிமிட்டும்
விண்மீன்களின் உற்சாகத்தால்
சற்றே தென்பாக........
முழுதுமாய் தான்
மறைந்துவிடப் போகும் அந்த
அமாவாசைக்கான நாட்களை
அமைதியாக எண்ணியபடி!

Saturday, August 27, 2011

பரிசுத்த உறவுகள்


பல சோகம் உனக்காக
பாரினிலே வந்தாலும்
பாசமாக உன்னை
பாதி உயிர் போகையிலும்
பக்கத்திருந்து பார்த்து
பரிவாய் அரவணைப்பவள்
பாசமான தாய் என்ற
பரிசுத்த உறவு மட்டுமே!

பெற்றவளிற்கு அப்புறமாய்
நீ பேதலித்து நிற்கையிலே
தோளோடு தோள் கொடுத்து
தொலைந்த துன்பங்களுக்கும்
தோற்று நிற்கும் வேளைக்கும்
தயங்காமல் வந்து நின்று
தன் துணை நல்கிடுவார்
உன் உற்ற உறவென்ற
உண்மையான நட்புக்கள்!

Wednesday, August 24, 2011

காத்திருப்பு

படித்ததன் பலன் அறிய

இறுதித் தேர்விற்காய்

விண்ணப்பித்து காத்திருக்கிறேன்

அனுமதி அட்டையும்

தேர்வுப் பத்திரமும் என்

கைகளில் கிடைத்ததும்

எனக்கு தெரியும்

நான் பரீட்சையில்

வென்று விட்டேனா

அல்லது

நிரந்தரமாய் என்றுமே

தோற்று விட்டேனா என்று!

Sunday, August 21, 2011

உன் பிரிவால்

அன்பே

இத்தனை நாட்களாய் உன்

ஸ்பரிசங்களை தீண்டிட

எத்தனை ஏக்கங்கள்

என் மனமென்ற கூட்டுக்குள்

என் ஏக்கமான பசிக்கு

இதமாக தீனி போட

ஒட்டு மொத்தமாய் இன்று

உன் ஸ்பரிசங்கள் சங்கமம்

என் உடலில் மெலிதான

சிலிர்ப்புக்கள் எத்தனை தான்

இது என் வாழ்வின்

எதிர்பாரா இன்ப அதிர்ச்சி

இப்படி புலம்பியது

என் வீட்டு சாய்மனை இருக்கை


அருகிருந்தும் உன்னை

அன்போடு மடியேந்த

முடிந்திடாமல் நான் பட்ட

முடிவில்லா துன்பத்தை

புரிந்துகொள்ள உன்னாலே

முடியாமல் போனதால்

என் உணர்வுகளை உள்ளுக்குள்

ஊமையாக புதைத்து விட்டேன்

என் ஏக்கத்திற்கு மருந்தாக

இன்று என் மடியிலே தவழும் உன்

பொன் மேனி தொட்டுவிட்ட

இதமான மகிழ்வில் நான்

இப்படி என்னை பார்த்து

ஏளனம்செய்தது

என் வீட்டு இருக்கைகள்


இத்தனை நாட்களாய்

என்னை தாங்கி இருந்துவிட்ட

உன் மடி என்ற இருக்கையும்

மாரபென்ற சார்மனையும்

என்னை விட்டு இன்று

தொலை தூரம்சென்றமையால்

என் வீட்டு பொருட்களெல்லாம்

என்னிடம் சீண்டுகிறது

தாம் நெடு நாட்களாக

தேக்கிவைத்த ஆசைகள்

இதமாக தீர்ப்பதற்கு