Monday, August 1, 2011

உன் சிணுங்கல்கள்

முக்கோண நட்புக்குள்
முட்டி மோதியது பாசம்
நட்புகள் கேட்டது
நீ யாருக்கு சொந்தமென
பதில்கள் சொல்வதில்
பல் வகை சிக்கல்கள்

ஆயிரம் உறவுகள்
அகிலத்தில் நமக்கு
அவர்களுக்கென்று
மனங்களில் இடங்கள்
உண்மை உறவுகள்
உயர்ந்த இடத்தில்
உள்ளமெனும் சிகரத்தில்!

சீண்டிப் பார்த்து
சிணுங்க வைப்பதில்
காதலை விடவும்
நட்புக்கு பிரியம்
சிணுங்கலின் ஊடலை
சிரித்து ரசிப்பதில்
போட்டிகள் எத்தனை!

நட்பே உன்னை
நட்போடு சேர்ந்து
நாசூக்காய் சீண்டுவதில்
நாம் காணும் இன்பங்கள்
நயமாக சொல்லிவிட்டால்
நாட்கணக்கில் நீ இங்கு
நம்மோடு பேசமாட்டாய்!

நம் சீண்டல்களில் நீ
நாணி நிற்கும் கோலத்தை
நின் கண்ணில் பட்டிடாமல்
நின்று பார்க்க ஆசை தான்
உன் கண்ணைப் பார்த்தாலே
தேக்கி வைத்த சில்மிசங்கள்
சிறகடித்து பறக்கிறது!

உன் சிணுங்கல்களை ரசித்து
சிறு கோவங்களை காண
முடிந்த வரை இங்கு
முயற்சியுடன் தொடருவோம்
நம் சிறு சிறு சீண்டலின்
சிதறடிக்கா சில்மிசத்தை!

1 comment:

  1. நன்றி நண்பர் MANO நாஞ்சில் மனோ

    ReplyDelete