Monday, August 15, 2011

சுயநலமாய் வரமொன்று

இறைவனே!

இத்தனை நாள் இல்லாது

இன்று நான் உன்னிடத்தில்

முதலும் இறுதியுமாய்

இனிய வரம் கேட்கிறேன்

என் வாழ்வில் கிடைத்த

இனிய என் உறவிற்காய்!



இப்படி நான் உன்னிடத்தில்

உருக்கமாய் கேட்பது

உண்மையில் இங்கு ஓர்

பொதுநல வரமல்ல

என் சுயநல நோக்கத்தின்

தனிப்பட்ட வரமே!



மனதுக்கு பிடித்த என்

இனிய உறவிற்கு என்றும்

இளகிய மனம் கொண்ட

உறவுகளை புரிந்து கொள்ளும்

இல்லற துணையை

வரமாக கொடுத்து விடு!



இது என் உயிரின்

இனிமையான வாழ்க்கைக்கு

மட்டுமல்ல - எங்கள் உறவு

என்றுமே நிரந்தரமாய்

இறுதி மூச்சு வரை

நிலைத்து நிற்பதற்கே!

1 comment:

  1. இப்படி நான் உன்னிடத்தில்
    உருக்கமாய் கேட்பது
    உண்மையில் இங்கு ஓர்
    பொதுநல வரமல்ல
    என் சுயநல நோக்கத்தின்
    தனிப்பட்ட வரமே! /

    supper kavithai..
    vaalththukkal..

    ReplyDelete