Saturday, November 27, 2010

நீ உணர்வாயா..?

காதல் தீயை வேக வைத்து விட்டு சென்ற காதலியே

என் வாழ்வின் கணங்களை

ரணங்கள் ஆக்கிவிட்டு எங்கே சென்றாய்..?

என் ரோமக் கணுக்கள் எங்கும்


காட்டுத்தீயாய் வேகுவதை உணர்வாயா..?

வெளியில் பார்க்கையில் நான் சிரிப்பது..

நான் மகிழ்வாக இருக்கிறேன்


என்பதைக் காட்டுவதற்காக இல்லை...

நான் அழுவதை உன் விழிகள்

ரசித்து விடக்கூடாது என்பதற்காக



எழுதியவர் - மிருணன்

உன் கோவங்கள்

தோழி!
உன் கோவங்கள்
எனக்கு பிடிக்கும்.

ஏனெனில்
அதில் தானே
என் உறங்கிய உணர்வுகளும்
தெரியாத பலவீனங்களும்
வெளியில் வருகின்றன.



எழுதியவர் - மிருணன்

தோழியே உனக்காக!

தோழியே!
உன்னை விட்டு நான்
விலகியே இருக்கிறேன்.

அருகில் இருந்தால்
என் இதயம் துடிக்கும் ஓசை கூட
உன் உறக்கத்தைக்
கலைக்க கூடாது என்பதற்காய்



எழுதியவர் - மிருணன்

உன் பாசம்

நான் முதல்முறையாக

உன்னை விட்டு பிரிந்து சென்ற போது

ஆறுதல் வார்த்தை கூறி

சிரித்து வழியனுப்பிய நீ

நான் சென்ற மறு நிமிடமே

தொலைபேசியில் அழைத்து

ஓ வென்று கதறி அழுதாயே

அந்த நிமிடம் தான் புரிந்தது

நீ என் மேல் வைத்திருந்த

உண்மையான பாசம்…..!


Friday, November 26, 2010

உன் மேலுள்ள பாசத்தால்.............!

துளி மிச்சமின்றி

தோக்கடிக்கப்பட்டு இறப்பதற்கு முன்
இன்னொரு முறை இறந்திருக்கிறேன்.
உடைந்து உள்ளே நான் அழுதிருக்கிறேன்.
ஆனாலும்
என் சுய சோகங்களை தவிர்த்து
நான் நீயாகவும்
நீ நானாகவும் வாழ்ந்த நாட்களை
எனக்காக தந்த உனக்காக
உன் குளிரணைக்கும் சருகாக
தீக்குள் அமிழ்ந்து விட நினைக்கிறேன்.





- படித்ததில் பிடித்தது -

Monday, November 22, 2010

நண்பனாய் இருக்க...........!



தோழியே

அன்று உன்னை நியாயப்படுத்துவதற்காக

நீ சொன்ன பொய்களால்

என் உண்மை நண்பர்களை

நான் இழக்கப் பார்த்தேன்

இப்போது கூட உன்னில் எனக்கு

கோபம் வரவில்லை..

ஏனெனில்..

அன்றும் உனக்கு நண்பனாய் இருந்தேன்

இன்றும் உனக்கு நண்பனாய்

இருக்க வேண்டும் என்பதற்காய்



எழுதியவர் - மிருணன்

மரத்து போன என் நினைவுகளில்

மரத்து போன என் நினைவுகளில்

மறக்காத நினைவுகளை

எண்ணிப் பாக்கிறேன்.

மெதுவாக பூத்து வந்த

அந்த காதல் செடியை

பயம் என்னும் வேலி போட்டு

நானே மறைத்து விட்டேன்.

இனிய காதலை

சொல்ல துணியாமல்

வீணாக துறந்து விட்டேன்
உன்னை காதலித்தேன் என்று

அன்றும் சொல்லவில்லை.

என் இரவின் நினைவுகளில்

உன்னை காதலித்தேன் என்று

உரத்து சொல்லவும்

வார்த்தைகள் வரவில்லை



எழுதியவர் - மிருணன்

Wednesday, November 17, 2010

ஏன் புரிய மறுக்கிறாய்.........!

நான் உன் உணர்வுகளை மதிக்கிறேன்
உன் காயங்களுக்கு மருந்தாகிறேன்
அது உனக்கும் புரிகிறது - ஆனால்
நீ நினைப்பது தான் தவறு
நான் உன்னோடு மட்டும்
உறவாக இருக்க வேண்டும் என்று!
உனக்கு நான் மட்டும் தான்
உறவாக இருக்கலாம்
ஆனால் எனக்கு அப்படி இல்லை
உன்னை விட பிடித்தவர்கள்
உயிரான உறவாக உள்ளார்கள்
இதை நீ ஏன் புரிய மறுக்கிறாய்.........!

Monday, November 15, 2010

நீ கிள்ளினால்......

நீ ஓரிடத்தில் கிள்ளினால்

கிள்ளிய இடம் வெக்கத்தில் சிரிக்கிறது
கிள்ளாத இடங்கள்
கோவத்தில் சிவக்கின்றன
இனி கிள்ளுவதென்றால்
எல்லா இடங்களிலும் கிள்ளிவை


அடப்பாவி கேட்டுக்கேட்டு
கிள்ளுவாங்குகிற
கிறுக்கியாக என்னை மாற்றி விட்டாயே!


நீ கிள்ளும் போது
ஆ வலிக்கிறது என்று கத்தினாலும்
வலி நின்ற பிறகு
எப்போதும் வலிக்கிற மாதிரி
கிள்ளத் தெரியாதா உனக்கு என்று
திட்டவே தோன்றுகிறது



எழுதியவர் - தபு சங்கர்

Sunday, November 14, 2010

விதி அனுமதிக்கவில்லை!

உறவுகள் இல்லாமலே
ஒன்று சேர்ந்தோம்
காரணம் இல்லாமலே
கைகோர்த்தோம்
சீண்டல்கள் இல்லாமலே
சிணுங்கினோம்
உண்மை உணர்வுகளை
பரிமாறினோம்
இன்று அர்த்தம் இல்லாமலே
பிரிய நினைத்தோம்
ஆனால் விதி மட்டும்
இதை அனுமதிக்கவில்லை!

இதயத்தோடு விளையாடுகிறாய்

நீ
ஒரு சிறுமியைப் போல
என் இதயத்தை வைத்துக்கொண்டு
விளையாடுகிறாய்
கவலையாய் இருக்கிறது எனக்கு
காரணம்
ஒரு பொம்மையை போல
என் இதயத்தை உடைத்துவிடுவாயோ
என்னபதற்காக அல்ல
உடைத்துவிட்டு
நீ அழுதுவிடுவாயோ
என்பதற்காக



எழுதியவர் - தபு சங்கர்

ஜென்மங்கள் வேண்டும்

இன்னும் பல ஜென்மங்கள் வேண்டும்
அதிலும் நீயே என் வாழ்க்கை
துணையாக வேண்டும்
என் இனியவளே என்றும் நீ
என் நட்பாக வேண்டும்
இறுதி மூச்சுவரை
நீயும் நானும் ஒன்றாக வேண்டும்
நம் நட்புக்குடும்பம் என்றும்
ஒன்றாக வாழ்ந்திட வேண்டும்

Thursday, November 11, 2010

புரியவில்லை உறவே...........!

அன்பே
உனக்கும் எனக்கும் என்ன உறவு?
உன் விலகல் என்னை
ஏன் காயப்படுத்துகிறது?
நீ என் கண்கவர் காதலும் இல்லை
கூட வந்த உடன்பிறப்பும் இல்லை
ஆனால் எல்லாமும் ஆகிவிட்டாய்
என் வாழ்வில்.............!
இதைத் தான் பாசம் என்பதா
இல்லை உண்மை நேசம் என்பதா?
புரியவில்லை உறவே...........!

ஏனடி இன்னும் தயக்கம்?

பட்ட மரம் தளிர்ப்பதுண்டு
தேய்ந்த நிலா வளர்வதுண்டு
மறைந்த சூரியன் எழுவதுண்டு
வற்றிய குட்டை நிறைவதுண்டு
பாலைவனத்திலும் மரங்களுண்டு
அன்பே நீ மட்டும் ஏன்
உன்னை விட்ட காதலை எண்ணி
புதிய உறவை ஏற்க தயங்குகிறாய்?
உன் பாலைவனத்தை
பசுமையாக்குவதில்
ஏனடி இன்னும் தயக்கம்?

வார்த்தைகள் தடுமாறும் போது

இதயங்களில் பாசமும்
உறவுகளில் நெருக்கமும்
வரும் சந்தர்ப்பத்தில்
சிறு சஞ்சலம் கூட
மனசை நோகடித்து விடும்
அவை தப்பல்ல என்று
தெரிந்த போதும் கூட
வார்த்தைகள் தடுமாறும் போது
மௌனங்கள் வார்த்தைகளாகும்
அவை கூட ஆயிரம்
அர்த்தங்கள் கூறும்

பதில் சொல் பெண்ணே!

நட்பு என்னும் சிறகுகளை
எனக்கு தந்துவிட்டு

இன்று நான்

நடுவானில் பறக்கையில்

சிறகுகளை கேக்கிறாயே

இது நியாயமா?

சிறகுகளை தந்துவிட்டால்

துடிக்கும் என் உயிருக்கு

என்ன தருவாய்

பெண்ணே!



எழுதியவர் - மிருணன்

Wednesday, November 10, 2010

ஏகாதிபத்தியத்தியம்

பழமரம் ஒன்றைப் பார்த்தால்
ஏகாதிபத்தியத்திற்கு
இருப்புக் கொள்ளாது
முதலில் வந்து
பழங்களைப் பறிக்கும்
அப்புறம் ஒரு நாள்
காய்களைப் பறிக்கும்
அவசரமென்றால்
பிஞ்சையும் பறிக்கும்
விளையாட்டிற்காய்
பூக்களைப் பறிக்கும்
வேதனையூட்ட அதன்
வேர்களைக் கிள்ளும்
பட்ட மரமாக்கிப் பின்
வெட்டிவிடும் விறகிற்காய்.





- படித்ததில் பிடித்தது -

Tuesday, November 9, 2010

இப்போ தான் புரிந்தது

வாயிலே அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்
கொப்பளித்துக் கொப்பளித்து
வாயும் ஓயாமல்.......
அழுக்கும் போகாமல்.......
உற்றுப் பார்த்தேன்
நீரே அழுக்கு!





- படித்ததில் பிடித்தது -

நிழலாக்கி விடாதே!

இனியவளே!
உன் நிழலைப்போல்
என்னை நேசிக்காதே
ஏனெனில் நிழல்கள்
அந்தியில் மங்கி விடும்
நானோ
என் வாழ்வின் இறுதிவரை
உன்னோடு வாழ
விரும்புகிறேன்.

Monday, November 8, 2010

அன்பான வேண்டுகோள்.......!

நான் நீயல்ல - ஆனால்

நான் நானாக இருப்பதற்கு - நீ

ஒரு சந்தர்ப்பம் தருகிறாய் இல்லை

நீ

என் விசயங்களில் தலையிடுகிறாய்

ஏதோ அவை

உன் விசயங்கள் போலவும்

நீ நான் போலவும்



“நான் நீயாக இருந்தால்........”

உனக்கு தெரியும்

நான் நீயல்ல என்றாலும்

நீ - என்னை நானாக இருக்க

விடுகிறாய் இல்லை



நான் நீயாகலாம்

உன்னை போல் பேசலாம்

நடக்கலாம், சிரிக்கலாம்

என எண்ணும்

உனக்கு புத்தியில்லை

உன் பக்கம் நியாயமில்லை



கடவுள் என்னை நானாகவும்

உன்னை நீயாகவும் படைத்தார்

கடவுள் பேரால் கேட்கிறேன்

என்னை நானாக இருக்க விடு.





- படித்ததில் பிடித்தது -

எப்போதும் இப்படித்தான்......!

ஓடும் ரயிலின்
இருக்கைகள்
எப்போதும் அதே பக்கமே
எங்கள் பயணப் பாதைகள் தான்
இப்போது மறுபக்கம்
அடம் பிடிக்காதே....
நீ பின்னோக்கியே
சென்றாக வேண்டும்...
உன் பதிவிலக்க இருக்கை
இதுவே தான்
இரும்பினை நம்பிய
இனிய பயணம்
இரு கோடுகள் தொடுக்கும்
புதிய பயணம்
நீ மட்டும் அடம்பிடிக்காதே
உன் பயணம் மட்டும்
உன் ஊரில் முடியும் - எனை
சந்திக்காது போனால் - நீ
சஞ்சலம் கொள்ளாதே
என்
பதிவிலக்க இருக்கையோ....
தொலை தூரப் பெட்டியில்........!

எதுவென்று சொல்வாயா?

நீயோ
கவிவரைந்த முகிலினத்துக்காய்
காத்திருக்கிறாய்........
கலையாத கனவுகளுக்குள்
காவியத்தைத் தொலைத்து விட்டாயா?
தொடரும் உன் காத்திருப்பால்
நீ
நிதர்சனப்படுத்த இருப்பது
எதுவென்று சொல்வாயா?

Saturday, November 6, 2010

நம் பாசத்தின் உறவு

கண்ட இடத்தில் கைகுலுக்கிட
சாதாரண உறவல்ல

கட்டியணைத்து முத்தமிட

காதலுமில்லை

அன்போடு தோள் சாய

நட்பும் இல்லை

ஆனால்
.....
இன்ப துன்பத்தை

பகிர எண்ணுகிறது
....!
அப்போ நம் பாசத்தின்

உறவு தான் என்ன.......?

Friday, November 5, 2010

தீபாவளி நல் வாழ்த்துகள்

எண்ணம் ஒரு மலர்
சிந்தனை ஒரு மொட்டு
செயல் அதன் கனி
வெறுப்பது யாராக இருந்தாலும்
நேசிப்பது நாமாக இருப்போம்.
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

Wednesday, November 3, 2010

உடன் பிறப்பாக

உடன் பிறப்புக்கள் கூட இருந்தும்
நீ தனியாக........
கூட யாரும் இல்லாமலும்
நான் தனியாக.....
வா அன்பே நாம் இணைவோம்
இனிய உடன் பிறப்புகளாக............!

Tuesday, November 2, 2010

கால்கொலுசாக........!

அன்பே........!
நான் உன்னைக் காதலிக்கவில்லை
கைப்பிடிக்கவும் ஆசையில்லை
ஆனால்
காலமெல்லாம் வாழ ஆசை
உன் காலடியில்
உன் கால் செருப்பாக அல்ல
உன்னை சிலிர்க்க வைக்கும்
கால்கொலுசாக........!

Monday, November 1, 2010

பணம் வந்தால்...........

மாறி வரும் இந்த உலகில்
மனிதர்களை மட்டுமல்ல
மிருகங்களான உங்களையும்
ஆட்டிப்படைக்கிறதா............?
பணம் வந்தால் மனிதர் மட்டுமல்ல
மிருகங்கள் கூட
அதை கை நழுவ விடாது என்று
புரிந்து கொண்டேன்
இன்று உன்னை பார்த்ததும்.........!

நட்பு

விரசமில்லாமல் நாம்

விரல் கோர்த்து நடந்ததுண்டு.



உனக்காக நானும்,

எனக்காக நீயும்

எத்தனையோ முறை

இறைவனை தொழுததுண்டு.



சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல

சேர்ந்து அழுவதும் நட்பு தான்

என எனக்குணர்த்திய



தோழனே!

நீ பெண்ணாக மாறிவிடு,

சமுதாயத்தின் சந்தேகப்

பார்வையில் இருந்து

நாம் விடுபடலாம்.





- படித்ததில் பிடித்தது -