Thursday, May 12, 2011

நட்பென்ற வடிவினிலே!

அன்புக்கு அன்னையாய்
அறிவுரைக்கு தந்தையாய்
பாசத்திற்கு அக்காவாய்
கண்டிப்புக்கு அண்ணனாய்
சீண்டலுக்கு தங்கையாய்
சிணுங்கலுக்கு தம்பியாய்

தட்டிக் கொடுத்திட ஆசானாய்
தலை கோதிட தோழியாய்
சேர்ந்து மகிழ்ந்திட நட்பாய்
தோள் சாய்ந்திட தோழனாய்
மழலை பேசிட குழந்தையாய்
மன்னித்திட மனசுள்ளவளாய்

பற்பல வடிவெடுக்கும்
பாசமான நட்பே
பாரினிலே உன் போன்ற
பக்குவமான பாச உறவு
ஆயுளுக்கும் எனக்காக
ஆண்டவன் தந்நுவிட்டான்
அன்பே உந்தன்
நட்பென்ற வடிவினிலே!

2 comments:

  1. நட்பை குறித்த அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பற்பல வடிவெடுக்கும்
    பாசமான நட்பே
    பாரினிலே உன் போன்ற
    பக்குவமான பாச உறவு
    ஆயுளுக்கும் எனக்காக
    ஆண்டவன் தந்நுவிட்டான்
    அன்பே உந்தன்
    நட்பென்ற வடிவினிலே!

    நடபுக்கான கவிதை
    நல்லாயிருக்கு...

    ReplyDelete