Friday, February 18, 2011

காதல்

கண்கள் சந்தித்தவேளை
காதல் மலர்ந்தது நெஞ்சி்ல
கிளிகளை போல வானில்
கீச்சிட்டுப் பறந்தது உள்ளம்
குடும்பத்தில் இணைய எண்ணி
கூப்பின கடவுளை நம்பி
கைதிகளாகின நெஞ்சம்
கெட்டவர் கண் பட்டதால்
கேள்விகள் பல கேட்டனர்
கொடுமைகள் பல செய்து
கோபத்தை கொட்டினர் நெஞ்சில்
கௌரவம் பார்த்து இங்கு
காதலரை பிரித்தனர்
காதலின் முடிவு இங்கு
க முதல் கௌ வரை தான்

5 comments:

  1. காதலின் முடிவு இங்கு
    க முதல் கௌ வரை தான்


    .... Good one!

    ReplyDelete
  2. கெளரவம் பார்த்து காதலரை பிரித்தனர்....எத்தனை காதலர் பிரித்தனர்.இப்பொது சற்று விழித்துக் கொண்டன்ர் . அவர்களது எதிர் காலம் என் புரிந்துணர்வு தென்படுகிறது. எதிர் நீச்சல் போட்டு வெல்வது தான் உண்மைக் காதல்.

    ReplyDelete
  3. //க முதல் கௌ வரை தான்//
    இதை வாசித்தது தான் புரிந்தது ..அருமை ..வாழ்த்துக்கள் :)

    அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

    ReplyDelete
  4. நன்றி நண்பர் கவிதை காதலன்

    ReplyDelete
  5. நல்லதொரு வரிக் கோர்ப்பு வாழ்த்துக்கள்..

    எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்

    சித்தாரா
    முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

    ReplyDelete