Saturday, November 27, 2010

நீ உணர்வாயா..?

காதல் தீயை வேக வைத்து விட்டு சென்ற காதலியே

என் வாழ்வின் கணங்களை

ரணங்கள் ஆக்கிவிட்டு எங்கே சென்றாய்..?

என் ரோமக் கணுக்கள் எங்கும்


காட்டுத்தீயாய் வேகுவதை உணர்வாயா..?

வெளியில் பார்க்கையில் நான் சிரிப்பது..

நான் மகிழ்வாக இருக்கிறேன்


என்பதைக் காட்டுவதற்காக இல்லை...

நான் அழுவதை உன் விழிகள்

ரசித்து விடக்கூடாது என்பதற்காக



எழுதியவர் - மிருணன்

1 comment:

  1. வெளியில் பார்க்கையில் நான் சிரிப்பது..
    நான் மகிழ்வாக இருக்கிறேன்
    என்பதைக் காட்டுவதற்காக இல்லை...
    நான் அழுவதை உன் விழிகள்
    ரசித்து விடக்கூடாது என்பதற்காக

    உன்னை ஏமாற்றிச் சென்றவளுக்காக நீ வருந்திக்கொண்டிருக்காமல் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தாயே இது தான் பாராட்டுக்குரியது. உன் வருத்தம் உன்னோடு இருக்கட்டும். அவள் மத்தியில் நீ மகிழ்வாக இரு.

    ReplyDelete