அன்பின் உறவிற்கு
ஆசையாய் கவிதை எழுத
இம்சை செய்யும் உணர்வுகளை
பத்திரமாய் கழற்றி விட்டு
மாடிப் படியிலே
மல்லாந்து சாய்ந்திருந்தேன்!
நினைத்து பார்க்கையில்
நீண்டு சென்ற கற்பனைகளை
நிரற்படுத்த முடியாமல்
நிதானம் தனை இழந்து
நிலை தடுமாறிய நான்
நிலத்திலே வீழ்ந்து விட்டேன்!
எழுந்து பார்க்கையில்
எனைச் சுற்றி பலர்
ஏளனம் செய்தபடி
கைகொட்டிச் சிரித்தனர்
முடியா வேலைக்கு முயற்சி என
வசை மொழி பாடியபடி!
எனக்குள்ளும் ஓர் ஆசை
என்றோ ஓர் நாள்
அத்தனை கைகளும்
கைதட்டி பாராட்ட
நானும் இவ்வுலகில் ஓர்
நல் கவிஞனாக வேண்டுமென!
ஆசைகளை தேக்கி வைத்து
அப்பப்ப கிறுக்கி வைக்கும்
ஐந்தாறு வரிகளினை
கவிதை என்ற பெயரினிலே
மேடையேற்றி வருகிறேன்
நானும் ஓர் கவிஞன் என!
ஆசையாய் கவிதை எழுத
இம்சை செய்யும் உணர்வுகளை
பத்திரமாய் கழற்றி விட்டு
மாடிப் படியிலே
மல்லாந்து சாய்ந்திருந்தேன்!
நினைத்து பார்க்கையில்
நீண்டு சென்ற கற்பனைகளை
நிரற்படுத்த முடியாமல்
நிதானம் தனை இழந்து
நிலை தடுமாறிய நான்
நிலத்திலே வீழ்ந்து விட்டேன்!
எழுந்து பார்க்கையில்
எனைச் சுற்றி பலர்
ஏளனம் செய்தபடி
கைகொட்டிச் சிரித்தனர்
முடியா வேலைக்கு முயற்சி என
வசை மொழி பாடியபடி!
எனக்குள்ளும் ஓர் ஆசை
என்றோ ஓர் நாள்
அத்தனை கைகளும்
கைதட்டி பாராட்ட
நானும் இவ்வுலகில் ஓர்
நல் கவிஞனாக வேண்டுமென!
ஆசைகளை தேக்கி வைத்து
அப்பப்ப கிறுக்கி வைக்கும்
ஐந்தாறு வரிகளினை
கவிதை என்ற பெயரினிலே
மேடையேற்றி வருகிறேன்
நானும் ஓர் கவிஞன் என!

நீ
ReplyDeleteநான்
கடிகாரம்.
இதை ஒருவர் என்னிடம் சொல்லி விட்டு, கவிதை எப்படி இருக்கிறது என்று கேட்டார்...
நான் பேந்த பேந்த முழித்தேன்...
இதையே கவிதை என்று சொல்லும் பொழுது, உங்கள் கவிதைக்கு என்ன குறை என்று பேந்த பேந்த விழித்து கொண்டிருக்கிறேன்
நன்றி நண்பர் suryajeeva. உங்களின் வெளிப்படையான மனக்கருத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteபரவாயில்லை அருந்தா. இப்படித்தான் முன்னேறுவது. தொடரலாம் இதற்கு நிறைய கவிதைகளை வாசிக்க வேண்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
எனது வலை. http://www.kovaikkavi.wordpress.com