கனவுகளை சுமந்துகற்பனைகளுடன் வளர்த்த காதல்
காற்று பட்ட கற்பூரமாய்
கணபொழுதில் மறையுமென
கனவில் கூட நினைக்கவில்லை
கரைந்து விட்ட கற்பூரமோ
கமகமக்கும் சுகந்தமுடன்
காற்றிலே மறைந்தது
காதலின் நினைவுகளோ
காயங்களை தருகிறதே!
காதலே உன்னை
கற்பூரமாய் பார்க்க
கடைசி வரை முடியவில்லை
காயத்திற்கு மருந்திட
கனவுகளோடு வாழ்கிறேன்!
No comments:
Post a Comment