Sunday, October 2, 2011

உன் பார்வை


அழகாய் வருடிய கூந்தல்
ஆங்காங்கே காற்றினால்
சற்றுக் கலைந்த கூந்தல்
நிலவு போன்ற வதனம்
நிலைதடுமாற்றும் சிற்றிதழ்கள்
தடுமாற்றமான உன்
குறுகுறு பார்வை
எல்லாமே சொல்கிறது
அழகின் தேவதை நீ என
இருந்தும் புரியவில்லை
உன் நெஞ்சில் உள்ளதா
என் மீது காதல் என!

No comments:

Post a Comment