Thursday, October 20, 2011

அவசர காத்திருப்பு


பாவையே உன்
பாசம் தனை வேண்டி
பனிக்கட்டி பாலம் மேல்
பரிதவிப்பாய் காத்திருக்கும்
புண்பட்ட உள்ளம் நான்!

பாசமாய் வந்து
பக்குவமாய் கைகோர்த்து
வாழ்க்கை பாதையில்
அரவணைத்து செல்வாயா?

பகலவன் வந்து
பனிக்கட்டி உருகிட
பாழான கடலினிலே
உயிர்மடிய செய்வாயா?

புகை மோதி இந்த
புவிதனில் விரிசல்கள்
வந்துவிட போவதில்லை
பூவையே என் கை பற்றி
புதுவாழ்விற்கு வந்துவிடு!

No comments:

Post a Comment