Wednesday, October 19, 2011

கற்பனை பூக்கள்

கற்பனைப் பூக்களை
கவிதை எனும் மாலையாக்கி
கனவுகளிற்கு சூட்டிவிட
கையிலே பேனாவும்
கால்துண்டு பேப்பருமாய்
காத்திருந்து பார்க்கிறேன்!
கவிதையும் வரவில்லை
கனவுகளும் பலிக்கவில்லை
கையிருந்த தாள் மட்டும்
காற்றோடு சேர்ந்தங்கே
கையசைத்து பறந்தது
மைவற்றி போன பேனா
கண்ணீரை மையாக்கி
கன்னங்களில் கோலமிட்டு
கவலையை வரைந்தது!

1 comment:

  1. நன்றி நண்பர் suryajeeva உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

    ReplyDelete