
நினைவுகளோடு வாழாதே
நிஜமாக வந்து விடு
இனியுள்ள வாழ்வுதனை
இனிமையாக்கி சென்று விடு
சுட்டெரிக்கும் வெயிலிலும்
இத்தனை குளிர்மையா?
அத்தனையும் உந்தன்
ஆசையுள்ள முத்த மழை
நனைந்தேன் உன் மழையினிலே
இழந்தேன் என் நினைவுதனை
உன்னோடு இங்கு நனைந்திட ஆசை
அத்தனையும் உந்தன் முத்தமழையினிலே
எப்படி நனைந்தாலும் சலிக்கவில்லை
உன்னுடனான முத்தக் குளியல் மட்டும்!
No comments:
Post a Comment