
வானிலே நின்று
சில்மிசமாய் கண்சிமிட்டும்
அந்த விடிவெள்ளி
விடைபெற காத்து
விட்டு விட்டு மறையும்
அந்த முழு நிலா
பற்பல இசையிலே
பாடி எழுகின்ற
அந்த பறவைகளின் ஓசை
புலந்திடும் பொழுதிற்காய்
புத்துணர்ச்சியாய் கூவுடும்
அந்த சேவலின் ஓசை
புற்களின் மேலிந்து
புவியை விட்டு அகலவிருக்கும்
அந்த பனித்துளிகள்
கதிரவன் வருகைக்காய்
கனிவோடு காத்திருக்கும்
அந்த தாமரை மலர்கள்
ஓரெல்லாம் கேட்கும் படி
நாதமாய் ஒலி எழுப்பும்
அந்த கோயில் மணி
கல கல ஓசையுடன்
சாலையை கடந்திடும்
அந்த காளை மாட்டு வண்டிகள்
கண் குளிர் ஆடையுடன்
பரிசுத்த மனதான
அந்த பள்ளி செல் மாணவர்கள்
கடமையின் நிமித்தம்
வாகனங்களில் விரையும்
தொழிலாளர் கூட்டம்
இத்தனையும் இங்கே
இனிமையாய் வரவேற்றது
இளங்காலை பொழுதை!
மிகவும் அருமையான கவிதை....
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com