
கைகோர்த்து கதைபேசி
காலாற நடந்த
அந்த கடற்கரை மணல்!
தோழோடு தலைசாய்த்து
துன்பத்தை பகிர்ந்திருந்த
அந்த புல்வெளி!
காதலாய் கைப்பிடித்து
கனிவாக கவி சொன்ன
அந்த ஒற்றை மரத்தடி!
கச்சிதமாய் கட்டியணைத்து
களங்கமின்றி முத்தமிட்ட
அந்த குளு குளு கன்னங்கள்!
நினைத்ததெல்லாம் நடக்க என
பக்தியுடன் வழிபட்ட
அந்த கோயில் மண்டபம்!
குளு குளு கதை பேசி
குதூகலித்து குடித்திருந்த
அந்த ஐஸ்கிறீம் பாலர்!
மனதோடு மகிழ்ந்திருந்து
மழையில் நனைந்து பயணித்த
அந்த ஒற்றை வழி தெரு!
அத்தனையும் கேட்கிறது
உன்னவள் எங்கே என
ஏளனமாய் சிரித்தபடி!
எப்படி நான் சொல்ல
என்னவள் எனைவிட்டு
எங்கோ சென்று விட்டாள் என!
காதல் கவிதைகள் தவிர்த்து வேறு எதுவும் கிடையாதா?
ReplyDeleteகாதல் ஒரு கொடுமை . அதிலும் பிரிவு அதை விட கொடுமை. என் நண்பர்கள் சொல்ல கேட்டது.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர் உங்கள் நண்பன்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர் suryajeeva
ReplyDelete