பழகிய பலருக்குள்
புரிந்த சில உறவுகளின்
உண்மையான அன்பும்
எதிர்பார்த்த பாசமும்
உயிரான புரிந்துணர்வும்
ஒரு நொடி பொய்த்தாலும்
பல நாட்கள் இங்கே
பார்த்து பார்த்து பழகிய
அத்தனை இன்பமும்
அந்த நொடிப் பொழுதினிலே
கை தவறி வீழ்ந்து விட்ட
கண்ணாடிக் குவளை போல
துகழ்களாய் நொருங்கிவிடும்.

கண்ணாடிக் குவளை போல
ReplyDeleteதுகழ்களாய் நொருங்கிவிடும்.//
முடித்த விதம் சிறப்பு