Friday, September 16, 2011

என் மனதை போல்

பாலைவனம் போன்ற அந்த
பரந்து விரிந்த சமவெளி
என் மனதை போன்றே
சலனங்கள் ஏதுமற்று!
இடையிடையே நிமிர்ந்து நிற்கும்
அந்த ஒற்றை மரங்கள்
மெல்லிய காற்றுக்கு
மெதுவாக தலையசைத்த படி
சோகமே முகவரியான
என் மனமெனும் தோட்டத்தில்
இடையிடையே எட்டிப் பார்க்கும்
பசுமையான என்
பழைய நினைவுகள் போல்!

2 comments:

  1. மறந்து போகாத சுவாசமாய் நினைவுகள் . கவிதை அருமை

    ReplyDelete
  2. நன்றி நண்பர் ! ❤ பனித்துளி சங்கர் ❤ !

    ReplyDelete