Wednesday, June 8, 2011

வென்றுவிடுவேன்

அன்போடு அணைத்து
ஆதரவாய் தோள் சாய்த்து
கன்னம் தொடும் கண்ணீரை
கனிவோடு துடைத்துவிடும்
களங்கமில்லா நட்பே!
ஆயுளுக்கும் நீ
அருகில் இருந்தால்
எத்தனை தான் சோகங்கள்
எனை தேடி வந்தாலும்
அத்தனையையும் மறந்து
அகிலத்தையே வென்றுவிடுவேன்
உன் துணையோடு!

3 comments:

  1. டைட்டில் என்னருகே நீ இருந்தால் என வெச்சிருக்கலாம், ஓக்கே. கவித நீட்

    ReplyDelete
  2. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete