Thursday, June 9, 2011

மாறாதவரம்

மாற்றம் என்ற ஒன்றே
மாறாத இவ்வுலகில் - உன்
மனது மாறியது ஒன்றும்
பெரிய மாற்றமில்லை
ஆனால்
என் மனது மட்டும்
ஏற்க மறுக்கிறது
உரிமையோடு கேட்கும் உன்
உரத்த குரலைத் தான்
உயிராய் எதிர்பார்க்கிறேன்
நீயோ எந்த உறவுமற்ற
அறிவுரையை பரிசளித்தாய்
இருந்தும்
என் மனமாவது
மாறாத வரம் கேக்கிறேன் - அந்த
மரத்து போன இறைவனிடம்!

5 comments:

  1. முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாக த்தான்

    ReplyDelete
  2. பிரியாத வரம் வேண்டும் என கேட்கறீங்க உங்க ஆள் கிட்டே..ம் ம்

    ReplyDelete
  3. மாறாதவரம் வேண்டும் மனம் மாறதவரம் வேண்டும்..

    நல்லாருக்கு சகோ...

    ReplyDelete
  4. அருமையான வரிகள்..............
    நல்லாயிருக்குங்க.......

    ReplyDelete
  5. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete