மெல்லிய காற்றினிடைமென்மையான பூக்களின்
மெதுவான ஆட்டம் பார்த்து
மெல்லிடையாளே உன் நினைவு
மெதுவாக அலை மோதும்
காந்த கண் பார்வையும்
கண் சிமிட்டும் உன் சிரிப்பும்
காண்பவர் மனதையெல்லாம்
கண்டவுடன் கொள்ளை கொள்ளும்
துரு துரு குறும்பும்
துள்ளித் திரியும் பாதமும்
தூக்கத்தின் போது கூட
துவம்சங்கள் பல செய்யும்
கன்னி உன்னை காண எண்ணி
காத்திருந்த காலம் போய்
இன்று என் கைக்குள்ளே
இனிய இல்லத்தரசியாய்....!
காத்திருந்த காலம்போய் கைக்குள்ளே என்னவள்.
ReplyDeleteதுன்பத்தின்பின் இன்பம் காத்திருத்தலின் பின் கை கூடியதும் வரும் இன்பம்........
.அனுபவிபவர்களுக்கு தான்புரியும் .அழகான கவித்துவ உணர்வுகள்.
படைபுக்கும் பகிர்வுக்கும் நன்றி .
GOOOD
ReplyDelete