பருவ மங்கைகள்
பலரை சந்தித்தேன்
பாசமான தோழியாக!
பல்கலை வளாகத்தில்
பாவையே உன்னை
பார்த்ததும் மயங்கினேன்
பறிகொடுத்தேன் இதயத்தை
மோகினியே உன்னுடன்
மோத நான் தயாரில்லை
மெதுவாக உன் மனதில்
மொத்தமாய் இடம் பிடிப்பேன்
அதுவரை அமைதியாய்
அடக்கி வைப்பேன் ஆசைகளை
அன்பினால் ஆகாதது
அவனியில் ஏதுமில்லை
ஆசை நாயகியே!
ஆதாம் ஏவாள் முதல்
நாகரிக காலம் வரை
ஆசை கொள்வதன் பெயர்
அன்புக் காதலே!
பலரை சந்தித்தேன்
பாசமான தோழியாக!
பல்கலை வளாகத்தில்
பாவையே உன்னை
பார்த்ததும் மயங்கினேன்
பறிகொடுத்தேன் இதயத்தை
மோகினியே உன்னுடன்
மோத நான் தயாரில்லை
மெதுவாக உன் மனதில்
மொத்தமாய் இடம் பிடிப்பேன்
அதுவரை அமைதியாய்
அடக்கி வைப்பேன் ஆசைகளை
அன்பினால் ஆகாதது
அவனியில் ஏதுமில்லை
ஆசை நாயகியே!
ஆதாம் ஏவாள் முதல்
நாகரிக காலம் வரை
ஆசை கொள்வதன் பெயர்
அன்புக் காதலே!

ஒரு ஆணின் மன உணர்வில் ஒரு பெண் மீதான காதலைப் பாடியுள்ளீர்கள். கவிதை நூல்களை நீங்கள் நிறையப் படித்தால் நிச்சயமாக சிறப்பான கவிதைகளை எழுத முடியும். மு.மேத்தாவின் கவிதை நூல்களையும், பா.விஜய்யின் கவிதை நூல்கள், வைரமுத்துவின் நூல்கள், தபு சங்கரின் நூல்கள் எங்காவது கிடைத்தால் தேடிப் படியுங்கள். இன்னும் இன்னும் சிறப்பாக நீங்கள் கவிதைகளைப் புனையலாம் சகோதரி!
ReplyDeleteஇது எளிமையான நடையில் ஒரு சம்பவத்தைச் சொல்லும் கவிதையாக அமைந்திருந்தாலும், கவிதைக்குரிய வார்த்தை அலங்காரங்கள் இன்னமும் நிறையச் சேர்க்க வேண்டியிருக்கிறது. ஆகவே உங்களின் கவிதைகள் எதிர்காலத்தில் புதுமை பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.
எளிமையான மொழியில் அதேசமயம் நயமாகவும் கவிதை உள்ளது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமென்மையாக காதலை சொல்லிவரும் கவிதை . மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பர்கள் நிரூபன், எஸ்.கே, சி.பி.செந்தில்குமார், நிலாமதி
ReplyDelete