Wednesday, March 2, 2011

இளங்காலைப் பொழுது

காலைத் தென்றல்
கண்சிமிட்டும் பூக்கள்
கதிரவன் ஒளி
காண்பவர் மனதை
கவர்ந்திழுக்கும் வேளை...!
படித்தவர் முதல்
பாமரன் வரை
பரமனை தொழ
அன்னையவள் இல்லத்தில்
ஆகுதிகள் பரிமாற
பள்ளிச் செல்வங்கள்
துள்ளிச் சென்று
பாடங்கள் படிக்க
பெரியவர் பொறுப்பாய்
பணிகளை தொடர
இனிதே புலர்ந்தது
இளங்காலைப் பொழுது!

1 comment:

  1. நன்றி நண்பர் நாஞ்சில் மனோ

    ReplyDelete