அன்பே!அழகாய் ஆரம்பித்த
அற்புதமான நம் பயணம்
அமைதியாய் தானே
இருந்தது!
அத்தனை நிமிடங்கள்
அமைதியாய் இருந்த
நம் மனது
சிறு அழுகுரல் கேட்டு
சலனப்பட்டது ஏனோ?
இத்தனை நாட்கள்
இனிமையாய் வழியனுப்பிய
உன் விழிகள்
வார்த்தைகள் இன்றி
தடுமாறியதேனோ?
நம் பயணத்தின் போது
பகிரப்பட்ட நம் மனங்கள்
இன்றைய பயணத்தில்
மௌனமாக்கப்பட்டது ஏனோ?
இன்று நம் பயணத்தில்
வார்த்தைகளை விட
மௌனங்களுக்கே
வலிமை கூடிவிட்டது!
>>வார்த்தைகளை விட
ReplyDeleteமௌனங்களுக்கே
வலிமை கூடிவிட்டது!
ரசித்தேன்
மெளனம் அழகானது. நல்லாயிருக்கு
ReplyDeleteநன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteநன்றி பிரஷா அக்கா. மௌனம் அழகானது தான். இருந்தும் கொடுமையானது
ReplyDelete