Saturday, March 19, 2011

காதலித்த காரணத்தால்

அன்று
பள்ளி பருவத்தில்
பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்
பருவ மங்கை என்னை
பார்த்த்தும் காதல் செய்தாய்

சிட்டுக் குருவியாய் என்னை
சிறகடித்து பறக்க வைத்தாய்
கடற்கரை மணலிலே
காதல் மொழி பொழிந்து
கைகோர்த்து வலம் வந்தாய்

நம் படிப்பு முடிந்தும்
வாழ்க்கையை எண்ணி
வாய் விட்டேன் திருமணத்திற்காய்
காரணங்கள் பல சொல்லி
காலம் தாழ்த்தி நின்றாய்

பொறுமையாய் காத்திருந்தேன்
பொறுப்பான உன் பதவிக்காய்
பதவியும் கிடைக்க
பறந்தாய் புகழின் உச்சிக்கு
பூரித்தேன் உன் நிலை கண்டு

பக்குவமாய் வந்து உன்
பெற்றவளிடம் மணம் பேச
உன் பதவிக்காய் சீர் கேட்டு
பாசத்தை விலை கேட்டாள்
சீதனம் எனும் பேரில்!

பாசத்தை விலை கேட்ட
பாசமான உன் தாயிடம்
போராட வழியின்றி
பலிக்கடா ஆனது என்

பள்ளிக்காலத்து காதல்

பணத்திற்காய் பாதை மாறிய
பாசாங்கு காதலனே
நீ இன்று குதூகலமாய்
புதிய வாழ்க்கை துணையுடன்
நான் மட்டும் இங்கு
முதிர் கன்னியாய்.........!

8 comments:

  1. ரொம்ப இயல்பா இருக்குங்க கவிதை. அதிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடுகிறது !

    ReplyDelete
  2. நன்றி நண்பர் கோமாளி செல்வா.

    ReplyDelete
  3. இயல்பா இருக்குங்க கவிதை.

    ReplyDelete
  4. வணக்கம் அனுஷப்பிரியா, உங்க டெம்ப்ளேட் நல்லா இருக்கு. இந்த கவிதை மனம் தொடுகிறது. கடைசி மூன்று வரிகளில் கவிதை கனக்கிறது. நல்ல எழுத்துக்கு வந்திருக்கிறீர்கள். தொடருங்கள். எங்க நம்மப் பக்கம் உங்களை காணும்....

    ReplyDelete
  5. >>>பலிக்கடா ஆனது என்

    பள்ளிக்காலத்து காதல்

    பலிகடா

    ReplyDelete
  6. தோல்வி கண்டு துவளாது புரட்சிப் பெண்ணாய் வாழ்ந்து காட்டுங்கள். பாராட்டுக்கள.

    ReplyDelete
  7. அன்று
    பள்ளி பருவத்தில்
    பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்
    பருவ மங்கை என்னை
    பார்த்த்தும் காதல் செய்தாய்//

    பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்...
    அட நாம உங்களைப் பார்க்கவே இல்லை. அதுக்கை ஒரு உவமையணியா..சும்மா பகிடிக்குச் சொன்னேன்.

    //
    பணத்திற்காய் பாதை மாறிய
    பாசாங்கு காதலனே
    நீ இன்று குதூகலமாய்
    புதிய வாழ்க்கை துணையுடன்
    நான் மட்டும் இங்கு
    முதிர் கன்னியாய்.........!//

    சீதனக் கொடுமையால் சிதறுண்ட வாழ்வை வாழும் ஒரு நங்கையின் உணர்வுகளைக் கவிதையால் வடித்துள்ளீர்கள். அதுவும் நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் ஆண்களையும் கவிதையில் சாடியுள்ளீர்கள். கவிதை இயல்பு நடையில் பெண்களின் இன்றைய சீதனச் சந்தையின் இன்னல்களைச் சொல்லி நிற்கிறது.

    காதலித்த காரணத்தால்: கனவுகளைச் சிதைத்து விட்டுக் கரை தேடத் துடிக்கும் கன்னியின் உள்ளத்து உணர்வினைப் பாடி நிற்கிறது.

    ReplyDelete