
அன்பே
இத்தனை நாட்களாய் உன்
ஸ்பரிசங்களை தீண்டிட
எத்தனை ஏக்கங்கள்
என் மனமென்ற கூட்டுக்குள்
என் ஏக்கமான பசிக்கு
இதமாக தீனி போட
ஒட்டு மொத்தமாய் இன்று
உன் ஸ்பரிசங்கள் சங்கமம்
என் உடலில் மெலிதான
சிலிர்ப்புக்கள் எத்தனை தான்
இது என் வாழ்வின்
எதிர்பாரா இன்ப அதிர்ச்சி
இப்படி புலம்பியது
என் வீட்டு சாய்மனை இருக்கை
அருகிருந்தும் உன்னை
அன்போடு மடியேந்த
முடிந்திடாமல் நான் பட்ட
முடிவில்லா துன்பத்தை
புரிந்துகொள்ள உன்னாலே
முடியாமல் போனதால்
என் உணர்வுகளை உள்ளுக்குள்
ஊமையாக புதைத்து விட்டேன்
என் ஏக்கத்திற்கு மருந்தாக
இன்று என் மடியிலே தவழும் உன்
பொன் மேனி தொட்டுவிட்ட
இதமான மகிழ்வில் நான்
இப்படி என்னை பார்த்து
ஏளனம்செய்தது
என் வீட்டு இருக்கைகள்
இத்தனை நாட்களாய்
என்னை தாங்கி இருந்துவிட்ட
உன் மடி என்ற இருக்கையும்
மாரபென்ற சார்மனையும்
என்னை விட்டு இன்று
தொலை தூரம்சென்றமையால்
என் வீட்டு பொருட்களெல்லாம்
என்னிடம் சீண்டுகிறது
தாம் நெடு நாட்களாக
தேக்கிவைத்த ஆசைகள்
இதமாக தீர்ப்பதற்கு
இது என் வாழ்வின்
ReplyDeleteஎதிர்பாரா இன்ப அதிர்ச்சி
இப்படி புலம்பியது
என் வீட்டு சாய்மனை இருக்கை/
ஆகா சாய்மனை கூட புலம்புதென்றால்..
அப்புறம் நீங்க என்ன செய்யிறீங்களோ தெரியல...hahaha
அழகான கவிதை..
நல்லாயிருக்குங்க...
பாராட்டுக்கள்...தோழி