நட்பே!இவ்வுலகத்தில் எனக்கு
பிளஸ் பொயிண்டும் நீதான்
மைனஸ் பொயிண்டும் நீதான்
உன்மீது நான் கொண்ட
உண்மையான பாசத்தை
தமக்கு சாதகமாக்கி
என்னையே முட்டாளாக்க
எத்தனை பேர் தான் இங்கு!
பாசத்தை வைத்து தம்
வேசத்தை காட்டி நிற்க
உன்மீது நான் கொண்ட
உண்மை பாசம் தான்
என் கண்களையே இங்கு
கருமைத் துணி கொண்டு
கட்டிக் கொண்டுள்ளது!
வேஷங்களை புரிந்த போது
பல உறவுகள் என்னை
தேடிவருவதன் அர்த்தங்கள்
புரிய தொடங்குகிறது
இன்றாவது புரிந்து கொண்டேன்
போலிகளின் வேஷங்களை!
உறவுகளை இங்கு நான்
உண்மையாக புரிந்து கொள்ள
உன் பாசம் எனக்கு
உன்னத வழியை காட்டியதால்
ஜெயித்து விட்டேன் நான்
வாழ்க்கையில் அல்ல
மனித மனங்களை இங்கு
மானசீகமாக அறிவதற்கு!
வேஷங்களை புரிந்த போது
ReplyDeleteபல உறவுகள் என்னை
தேடிவருவதன் அர்த்தங்கள்
புரிய தொடங்குகிறது
இன்றாவது புரிந்து கொண்டேன்
போலிகளின் வேஷங்களை!
supper kavithai..
vaalththukkaL..
http://sempakam.blogspot.com/
நன்றி நண்பர் vidivelli
ReplyDelete