Monday, July 11, 2011

மறந்து விடாதே

அன்பே!
நம் நட்பு காலத்தின்
நயமான பேச்சுக்கள்
வீணான சண்டைகள்
விதண்டாவாத விவாதங்கள்
உன் விழிகளை நனைத்து
இதயத்தை காயப்படுத்தினால்
மன்னித்து விடு
என்றோ ஒரு நாள்
என் மரணச் செய்தி கேட்டு நீ
நிலைகுலைந்து நிற்கையில்
உன் பிடிவாதங்களை
தொலைத்து விட்டு
என் உடலையாவது
இறுதியாக பார்த்து செல்
ஏனெனில்
நீயாக நினைத்தால் கூட
பின்பு நீ என்னை
பார்க்கவே முடியாது

3 comments:

  1. நெஞ்சை உருக்கும் கவிதை வரிகள்.
    யதார்த்தமான எழுத்துநடையில் கவிதை அருமை தல.

    ReplyDelete
  2. பிரிவு கொடுமையானது. பிரிவதற்கு முன் கடைசி ஆசையாக இருக்கலாம்.

    ReplyDelete
  3. marana seythi ketu enru solla valiyai irunthalum athu nanraka ulathu. en natpu kidaithathu. makilchi

    Ramy

    ReplyDelete