Sunday, July 24, 2011

கலைந்து போன காதல்


கலைந்து போன காதலுடன்
கனிவான உன் பேச்சை
கண்ணார ரசிக்கும் நான்
காதலில் தோற்கவில்லை
கடைசி வரை தோள் கொடுக்க
கண்ணே நீ நட்பாக
காலம் பூராய் உள்ள போது
காதலில் தோற்ற வலி
எங்கோ ஓர் மூலையில்
கனமாக இருந்தாலும்
காலம் வரை நான் இருப்பேன்
கனிவாக உன்னோடு!

2 comments:

  1. அருமை.. அழகான உணர்வு வெளிப்படுகிறது கவிதை வரிகளில்

    ReplyDelete
  2. நன்றி நண்பர் கவிதை காதலன்

    ReplyDelete