பெண்ணே!நாகரீகம் எனும் பெயரில்
நயமாக உடையணிந்து
நானிலம் எங்கும்
நடைபயிலும் நீ
நாகரீக மோகத்தில்
சம்பிரதாயங்களை
சற்றுக் கவனிக்கவில்லை!
நீ செய்யும் சிறு தவறு
நானிலத்தில் மற்றோரை
நாசூக்காய் நசுக்குவதை
ஏன் தான் நீ இங்கு
அறிய மறந்தாயோ?
திருமண பந்தத்தின்
தீர்க்கமான வெளிப்பாடான
திருமாங்கல்யம் உன்
நெஞ்சினிலே காணவில்லை
காரணம் கேட்டால்
நாகரிக உடைக்கு
ஒத்து போகவில்லை என
சாடை செய்யும் பதில்கள்!
மஞ்சளரைத்து குங்குமமிட்டு
குனிந்து நடக்கும்
குடும்ப பெண்ணே
ஆடை நிறத்தில்
அழகழகாய் வதனமதில்
ஸ்டிக்கர் பொட்டணிந்து
பல வர்ண பூச்சுடன் நீ!
கண்டதும் காதல் கொள்ளும்
காளைகள் பலர் இங்கு
இவள் கன்னியா? இல்லை
வேறோர் கணவனின்
சொந்தமா என்று
கலங்கிப் பார்க்கும்
காலம் இது!
நாகரீக மோகத்தால்
நங்கை நீ மட்டுமல்ல
நேர்மையாய் காதல் செய்ய
காத்திருக்கும் ஆடவரின்
பூவான இதயத்தில்
தீ வைத்து செல்கின்றாய்!
காரிகையே!
கையெடுத்து கும்பிட்டு
கனம் பண்ண வேண்டிய உன்னை
காதல் செய்து கேலி பண்ண
காரணமாகி விடாதே!
வையகம் போற்றிடும்
கோதையே நீ
உன்னை திருத்தி விடு
உனக்காக இல்லாவிடினும்
உண்மையாய் காதல் செய்ய
உலகிவே காத்திருக்கும்
உத்தமமான சில ஆண்களுக்காய்!
கவிதை சாட்டையடி...
ReplyDeleteஅருமையான எழுத்து. வாழ்த்துக்கள்.
இன்றைய நிலையை வரிகளில் படம் பிடித்து
ReplyDeleteகாட்டியமைக்கு வாழ்த்துக்கள்
கேலிக் கூத்து இன்றைய சில பெண்டிர் செய்யும் செயல்கள்..
ReplyDeleteநிறைவான எழுத்து நடை ..
இன்றையா நாகரிக மோகத்தை சாடும் அழகான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeletesariyaka than solli ulleerkal thankal***********
ReplyDeleteகாலம் காலமாக உடையையும் உடலையும் மாத்திரமே கொண்டு பெண்ணிற்கு வேலி போடுகிறோம். பாரம்பரியம், கலாச்சாரம் பெண்ணுக்கு மட்டுமே இருப்பது போல எம்மில் சிலர் திணிக்க முற்படுவது கேலியானது. சமூகத்தில் கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்கள் மீது உங்கள் சுயநலக் கருத்துக்களை திணிக்காதீர்கள். பெண்ணை சுயமாக வாழ விடுங்கள். வேலிகளால் வரையறை போடாதீர்கள். ஆணைப் போல பெண்ணுக்கும் வாழ உரிமை உண்டு.
ReplyDelete- குகநிதி குகநேசன் -