Monday, July 11, 2011

மனதார நேசிக்கிறேன்

இரவை நேசிப்பவர்கள் பலர்

இரவின் மடியில்

இறுக்கி அணைக்கும்

தலையணையை நட்பாக்கி

இதயத்தின் சுமைகளை

இறக்கி வைப்பார்கள்!


நானோ

மழைத்துளிகளை

மனதார நேசிக்கிறேன்

என் கண்ணோடு கரையும்

கண்ணீர் துளிகளை

கவலையின்றி தன்னுள்

ஒன்றாக்கி கொள்வதால்!


மழையே

என் மழையின் துளியே

மனதார நான் இங்கு

கலங்கி நிற்கும் போது

நொடிகூட தயங்காமல்

என் ஸ்பரிசங்களை

தொட்டு சென்று விடு!


என்னை ஆறுதல் படுத்தும்

இனிய இயற்கையே

உன்னை நான் இங்கு

செயற்கையாய் தேடுவது

சாத்தியமாய் இல்லை!


உன் துளிகளாய் நினைத்து

என் சோகத்தின் முகவரியை

சொல்ல துடிக்கும் என்

கண்களின் அருவிகளை

கண்ணீராய் கையேந்தும்

என் குழியலறை பூங் குழாய்களுக்கு

தற்காலிகமாய் நன்றி சொல்வேன்

மழைத்துளியே நான் உன்னை

மனமார தரிசிக்கும் வரை

6 comments:

  1. அற்புத வரிகளை அழகாய் கோர்த்து சிறப்பான கவி வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான வரிகள்.
    அற்புதமான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. // மழையே
    என் மழையின் துளியே
    மனதார நான் இங்கு
    கலங்கி நிற்கும் போது
    நொடிகூட தயங்காமல்
    என் ஸ்பரிசங்களை
    தொட்டு சென்று விடு! //

    அருமையான வரிகள்.. கவிதை நன்றாக உள்ளது.. இன்னும் கொஞ்சம் எழுத்துப் பிழைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் மேலும் மேலும் கவிதை மெருகு பெறும்

    ReplyDelete
  4. இரவின் மடியில்
    இறுக்கி அணைக்கும்
    தலையணையை நட்பாக்கி
    இதயத்தின் சுமைகளை
    இறக்கி வைப்பார்கள்!

    nan unarntha verikal. kavithai enai etho seykirathu. en valkayai puratukirathu. sukamakavum sumayagavum ulathu

    ReplyDelete
  5. நன்றி நண்பர் koodal bala

    ReplyDelete