நீ நீயாகவும்
இருந்த அந்த நாட்களை
எண்ணிப் பார்க்கிறேன்
நினைவில் இல்லை
இன்று
நான் நீயாகவும்
நீ நானாகவும்
முழுமையாக
மாறிவிட்டோம்
உன் பிரிவு என்னையும்
என் பிரிவு உன்னையும்
சில நாட்கள் என்றாலும்
யுகங்களாக்கி பார்க்கிறது
காரணம் மட்டும் புரியவில்லை
நினைத்துப் பார்க்கவே
நிச்சயமாய் முடியவில்லை
நமக்குள் எப்போதாவது
நிரந்தரமான பிரிவினை........!

>>நமக்குள் எப்போதாவது
ReplyDeleteநிரந்தரமான பிரிவினை..
நுட்பமான வரிகள்
முதல் மழை எனை நனைத்ததே
ReplyDeleteநன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்
ReplyDelete