Tuesday, May 31, 2011

சிந்தனை செய் மனமே!

சிக்கலுக்குள் சிக்கி
சின்னா பின்னமாகும்
சிறு இதயமே!

சிக்கலை கூட
சிக்கில்லாமல் எடுத்திடும் உன்
சிந்தனை மனமெங்கே?

சிந்தனை கூட
சில சமயங்களில்
சிதறடிக்கப்பட்டு விடும்

சிந்திக்க சிந்திக்க
சிறப்பான கருத்துகள்
சிந்தையில் தோன்றிடும்!

சில நொடி நீ
சிந்தாமல் சிதறாமல் - உன்
சிந்தையை நிறுத்து!

சீண்டியுனை பார்த்திடும்
சீரற்ற எண்ணங்களை
சிறு நிரற்படுத்து!

சிந்தித்து பார் - நீ
சிதறவிட்ட தருணங்களை
சீரான பதில் கிடைக்கும்!

சிதைந்து போன கனவுகளும்
சிரம் தாழ்த்தி உன்னிடம்
சிரிப்போடு வந்துவிடும்!

சில நொடி சிந்தனை கூட
சீரான உன் வெற்றிக்கு
சிறந்த ஓர் திறவு கோல்

5 comments:

  1. nice aruntha pichu uthritta

    ReplyDelete
  2. கவிதை பூரா சி - சீ ஆதிக்கமா இருக்கே?

    ReplyDelete
  3. நன்றி நண்பர் மாணவன்

    ReplyDelete
  4. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete