Sunday, December 26, 2010

சிறிதாய் ஓர் சந்தேகம்

சின்னஞ்சிறு வயது முதல்

சினேகமாய் கைகோர்த்து

சிறுகதைகள் பேசி

செல்லமாக சீண்டிய

என் இனிய நட்புறவே

இன்று எங்கு சென்றது

உன் சினேகமும்

இத்தனை நாள் புரிந்துணர்வும்?


நண்பனில் தவறு கண்டால்

நல்லுரை கூறித் தீர்க்கலாம்

ஆனால்

நட்பிலே தவறு கண்டால்

எவ்வுரை கூறித் தீர்ப்பது?


இன்பமோ துன்பமோ

அருகிருந்து அரவணைத்து

ஆறுதல் சொல்பவனே

உண்மை நட்பென்று

இத்தனை நாள்

அர்த்தம் கொண்டேன்


இன்று தான் புரிந்தது

நட்பாலும் பல

காயங்கள் கொடுத்து

ரணமாக்க முடியும் என்று

கூட பழகியவளையே

புரிந்து கொள்ளாத

நீயும் என் நட்பா?

சிறிதாய் ஓர் சந்தேகம்

முளைவிட்டது என் மனதில்!

7 comments:

  1. உண்மைதான் தோழி சொல்லில் புரியவைத்தால் நம் நட்பை கேடென்பான் அனைத்து புரியவைத்தால் அட போடா என்பான் என் சொல்லி புரியவைப்பது புரியாத உள்ளத்தே புரிந்துனரும் பாக்கியம் சிலருக்கே கிட்டியிருக்கும் வர பிராசாதாம் நமக்கும் கிட்டியிருந்தால் புரிந்து முன்பே பிரிந்திருப்போம் அல்லவா நாம் ஒன்று நினைக்க அவன் ஒன்று நினைக்க நிரந்தரம் எது நம்மில்...........

    ReplyDelete
  2. உண்மை தான். நன்றி நண்பர் தினேஷ்குமார்

    ReplyDelete
  3. "கூட பழகியவளையே
    புரிந்து கொள்ளாத
    நீயும் என் நட்பா?
    சிறிதாய் ஓர் சந்தேகம்
    முளைவிட்டது என் மனதில்!"
    nice lines arunthathi..

    ReplyDelete
  4. சில நேரங்களில் நட்பின் அர்த்தம் தெரியாமல் இப்படி தான் செய்கிறார்கள் சிலர்...

    ReplyDelete
  5. ....>>>>கூட பழகியவளையே
    புரிந்து கொள்ளாத
    நீயும் என் நட்பா?
    சிறிதாய் ஓர் சந்தேகம்


    மனதை கவர்ந்த வரிகள்

    ReplyDelete
  6. நன்றி நண்பி மீனா

    ReplyDelete
  7. நன்றி நண்பர் சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete